உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

87

அவரையுடைய தலைவற்கு வசதியும் மனக்கிளர்ச்சியும் உண்ட ாகுமோ என்பதை நினைந்துபார்மின்கள்! அவரால் தலைவர்க்கு ஒயாக் கவலையுந் துன்பமுமே உளவாகுமாதலான், அவர் நீண்டநாள் நன்கு உயிர்வாழ்தல் இயலாது. மற்றுத், தந்தலைவன் குறிப்பறிந்து அவன் எல்லாவகையிலும் உவக்கும்படி ஏவற்றொழில் புரியவல்லாரே, அவற்குக் கவலையில்லா உள்ளக் களிப்பினையும், அதன் வாயிலாக நீண்ட வாழ்நாளினையும் அவற்கு விளைக்க மாட்டுவாராவர். இந் நுட்பமறிந்துரைத்த பிசிராந்தையாரது புலமை எத்துணை நுண்ணிதாய்த் திகழ்கின்றது! இங்ஙன மெடுத்துக்காட்டிய இரு காரணங்களும் ஒருவன் நீண்டநாட் கவலையின்றி வாழ்தற்கு இசைந்த அகக் காரணங்களாகும்; அஃதாவது ஒருவனது இல்லத்தே உளவாய காரணங்கள்.

இனி, ஒருவன் கவலையில்லா நீண்டவாழ்க்கையில் வாழ்தற்கு அவன் தன் இல்லின் புறத்தே உணவாதற்குரிய காரணங்களிரண்டைப் புலவர்பிரான் பிசிராந்தையார் நுவன்றதூஉம் ஒரு சிறிது ஆராயற்பாற்று. ஆசிரியர் குடியிருந்து வாழும் ஊர்க்கு அரசனாய் இருந்தவன் தனது அரசியன் முறையிற் றீயதேதும் புகாமற் செங்கோல் செலுத்திக் குடிபுறந்தந்தமையே தாம் கவலையின்றிப் முதுமை தெரியாமல் உயிர்வாழ்ந்ததற்கு ஏதுவாயிற் றென்கின்றார். அரசன் கொடியனாய்க் குடிமக்களை வருத்தி இறைப்பணம் வாங்குபவனாயிருந்தாலும், முறை வேண்டினார்க்குங் குறை வேண்டினர்க்கும் நடுநின்று அரசு செலுத்தாமல் நெறி வழிஇ ஒழுகுபவனாயிருந்தாலுங், குடிமக்கள் இனிது வாழ்தற்கு இன்றியமையாது வேண்டிய நற்செயல்களைப் புரியானாய்க் குடி சூது காமம் முதலிய தீச்செயல்களிலேயே முழுகினவனாயிருந்தாலும் அவனது நாட்டின்கீழ் வாழ்வார்க்குத் துன்பமே நோயே வறுமையே வாழ்நாட் குறைவேயல்லால் வேறு நன்மை சிறிது உளதாகாது. இது பற்றியே,

"கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/112&oldid=1579736" இலிருந்து மீள்விக்கப்பட்டது