உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மறைமலையம் - 10

தமக்கொரு சமையற் காரனைப் புதிது அமைத்தார். அவர் ஒருநாள் விரைந்து வெளியே போகல்வேண்டினமையின் விரைந்து உணவமைக்கும்படி அவற்குக் கட்டளையிட்டார். குறிப்பிட்ட நேரத்தில் அவர் அடுக்களையிற் போந்து தமக்கு உண வமைக்கும்படி கேட்க, அச்சமையற்காரன் சோற்றைமட்டும் வேகவைத்துக் கொண்டிருந்தான்; குழம்பு கறிகள் ஏதும் இன்னும் அமைத்திலன். இவையெல்லாம் அமைப்பதற்கு மூன்று மணிநேரங்கள் முன்னமே அவர் தெரிவித்திருந்தும் அவன் அறிவின்மையினாலோ அல்லது ஒழுங்காகச் செய்ய மாட்டாமையினாலோ, சோற்றை முக்கால் வேக்காடாக அவித்தற்குமேல் வேறேதுஞ் செய்திலன்; அத் தலைவர் காலந்தாழ்த்தல் ஆகாமையின் செய்தவரையிற் கொணர்ந்து படைக்கவென அவனை ஏவினர். அவன் முக்கால் வேக்காட்டி லுள்ள சோற்றைமட்டுங் கொணர்ந்து படைத்து, 'இன்னுஞ் சிறிது நேரத்திற் குழம்புகறிகள் ஆய்விடும்' என நுவன்றனன். அவர் அவ் வாளின் மடமைக்கு உள்ளே மிகவருந்தி, 'நல்லது, சோற்றில் விட்டுக்கொள்ளுதற்கு என்ன வாங்கி வைத்திருக் கின்றாய்?' என வினவ அவன் 'நெய்யுந் தயிரும் வாங்கி வைத்திருக்கின்றேன்' எனக் கூறி உட்சென்று ஒரு தயிர்க் கிண்ணத்தை எடுத்துவந்தனன். ‘முதலிற் சிறிது நெய்யை விடு' என அவர் கேட்ப, அவன் தான் கொணர்ந்த கிண்ணத்தைக் கவிழ்த்துப் பார்க்கத் தயிர் கீழே சிந்திப்போனதை அவன் உணராமல் 'ஐய! நெய்யுந்தயிரும் வாங்க இரண்டு கிண்ணம் ஏதுக்கு என்று இந்த ஒரு கிண்ணத்தின் அடிப்பக்கத்துள்ள வட்டிலில் நெய்யும் மேற்பக்கத்துள்ள வட்டிலில் தயிரும் வாங்கிவைத்தேன். கீழேயுள்ள வட்டிலில் நெய்யைக் காணோம், மேலே யுள்ள தயிரையாவது விட்டுக் கொள்ளுங்கள்' என்று சொல்லி அக் கிண்ணத்தை மேலே திருப்பினான். கீழ்த் திருப்பியபோதே கொட்டிப்போன தயிரை நோக்காமல் அவன் செய்ததைப் பார்த்து, அவனது மடமைக்காக அவ்வறிஞர் சிரிக்க, அவன் அவர் தனது சமையல் தொழிலின் திறமையைக் கண்டு மகிழ்கின்றாரென நினைந்து, 'பெருமானே! எனக்குச் சம்பளஞ் சிறிது கூடக் கொடுத்தருளல் வேண்டும்! என அவரைப் பணிந்து கேட்டனன். இங்ஙனந், தலைவன் கருத்துக்கு

மாறாக நடக்கும் மடமைமிக்க ஏவலர் உளராயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/111&oldid=1579735" இலிருந்து மீள்விக்கப்பட்டது