உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

85

யாது செய்யலாம்?” எனப் புன்னகை புரிந்துகேட்ப, அவன் பரிந்து “அவனுடைய கால்களை இரண்டாகத் துணித்தெறிதல் வேண்டும்,” எனப் பரபரப்புடன் கூறினன். அதன்பின் அம் மன்னன் அங்ஙனமே புன்னகைசெய்து மற்றொருவனைப் பார்த்து, “என் மார்பில் உதைத்தான் கால்கட்கு யாது செய்யலாம்?” என வினவ, அவன் “அங்ஙனந் தங்கள் மார்பில் உதைத்த குறும்பன் கால்கட்குப் பொற் றண்டையுஞ் சதங்கையும் அணிதல் வேண்டும்” என மொழிந்தனன். பார்மின்! அரசன் மார்பில் ஏறி உதைக்கத்தக்கவன் அவன் ஈன்ற சிறானேயன்றிப் பிறனொருவனாதல் பொருந்தாதே! தன் மகன் தன் மார்பின் மீதேறி விளையாடினதை உட்கொண்டு வினாய அரசனது கருத்தை முன்னவன் அறியாதுரைப்பப், பின்னவன் அதனை யறிந்துரைத்த நுட்பம் எத்துணை வியக்கற்பாலதாய் மகிழற் பாலதாய் இருக்கின்றது! இனி ஒரு சிறந்த விருந்தினர் தமதில்லத்திற்கு வரப்பெற்ற ஒரு தலைவன் தன் சமையலாளை அழைத்து, “இப் பெரியார்க்கு நல்விருந்து செய்க!” என்று ஏவினன். அதற்கு அவ்வேலவன் மிகமகிழ்ந்து பல்வகைக் கறிகளுங், குழம்பும், அடிசிலும் பிறவும் அமைப்பானாய்ப் புகுந்து வந்த விருந்தினர்க்குப் பசியெடுக்கும் வேளை யிதுவாகுமென நினைந்து பாராமற் சமையல் தொழிலிலேயே முனைந்து நின்றான்; பிற்பகல் இரண்டு மணிக்கு மேலாகியும் விருந்துணா முடிந்தபாடில்லை. இதற்குள் விருந்தினர்க்குப் பசித்துன்பம் மிகுவதாயிற்று. தன் தலைவன் கருத்தும், விருந்தினர் பசிக்குறிப்புந், தன் சமையலாள் மடமையும் முன்னமே அறிந்து வைத்த அவ் வில்லத்தலைவி, மிகச்சிறந்த உணவன்றாயினும் பசிவேளைக்கேற்ற இன்சுவை யுணவாவ தனை விரைந்தமைத்துத் தம்மில்லம் வந்த அவ் விருந்தினர்க்குந் தங் கொழுநற்கும் படைத்து அவர்தம் பசித்துன்பத்தைப் போக்கினாள். ஆகவே, ஒருவரது கருத்தறிந்தும் அதற்கேற்ப நடவாமை எத்துணை அருவருக்கற்பாலதா யிருக்கின்ற தென்பதூஉம், அதனையறிந்து அதற்கேற்ப நடத்தல் எத்துணை விரும்பற்பாலதாயிருக்கின்ற தென்பதூஉம் இதனால் நன்கு விளங்குகின்றன வல்லவோ? இனித், தம் தலைவன் கருத்துக்கு மாறாக நடக்கும் மடமைக்கும் ஒன்றெடுத்துக் காட்டுதும். சிறந்த நிலையிலமர்ந்து வேலை பார்க்கும் அறிஞர் ஒருவர் ஒருகால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/110&oldid=1579733" இலிருந்து மீள்விக்கப்பட்டது