உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் - 10

ல்

இனிது வாழ்தற்கு, அவர், தம்மில் எஞ்ஞான்றும் அன்பினா அகங்கெழுமிக் குளிர்ந்த முகனும் இழைந்த சொல்லுங் குழைந்த நடையும் வாய்ந்து மாறின்றி ஒழுகுதலேயாம் என்பது போதரும்.

மணக்கலாயினர்.

ருபாலா

அஞ்ஞான்றிருந்த நந் தமிழ்மேன்மக்கள், அன்புக்கும் அருளுக்கும் அறத்திற்குமே தலைமைதந்து, சாதிக் கட்டுப்பாடு சமயக் கட்டுப்பாடுகளை அவற்றின் தலைமைக்கீழ் அடக்கி வைத்து வாழ்க்கை செலுத்திவந்தமையால் ஆடவர் தமக்கேற்ற மகளிரையும், மகளிர் தமக்கேற்ற ஆடவரையுங் காதலன்பின் வழிச்சென்று அங்ஙனம் ருள்ளமும் அன்பினாற் குழைந்துருகி ஒருமையுற்றபின், அவரது வாழ்க்கையிற் கவலையாதல், துன்பமாதல் நுழைதற்குச் சிறிதேனும் இடன் உண்டாமோ? அவ்வாறு மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்த அவர்தந் திருவுருவம் என்றும் மூவாது இளமையாகவே விளங்குமல்லது பிறிதாமோ? இன்னும் இதன்விரிவை எமது ‘மக்கள் நூறாண்டுயிர்வாழ்தல் எப்படி?' என்னும் நூலிற் கண்டுகொள்க. இத்துணைச் சிறந்த ஒர் அரும்பெரு

நுட்பத்தைக் கண்டு அதனைத் தமது இளமைக்குத் தலைசிறந்த காரணமாக முதற்கண் எடுத்துரைத்த ஆசிரியர் பிசிராந்தை யாரின் கூர்த்த அறிவின் மாட்சி என்றும் நினைவுகூர்ந்து பாராட்டற் பாலதாகும்.

இனி, தாம் ஆண்டில் முதியராயிருந்தே வடிவில் இளைஞராய்த் தோன்றுதற்கான இரண்டாவது காரணத்தைத், தம் ஏவலர்பால் வைத்துரைக்கின்றார் பிசிராந்தையார். நம் புலவர் பெருந்தகைக்கு ஏவலராய் அமைந்தவர்கள் தம் தலைவன் கருத்தறிந்து, அதற்கொத்து நடப்பவர்கள் என்பது ‘யான் கருதி அதனையே கருதுவர் எனக்கு ஏவல்செய்வாரும்' என்று அவர் கூறுமாற்றால் அறியப்படும். தம் தலைவன் கருத்தை அறியாமல் நடப்பவராகவேனும், அறிந்தும் அதற்கேற்ப நடவாதவராகவேனும், அல்லததற்கு மாறாக நடப்பவராகவேனும் ஏவலர் ஒழுகுவராயின், அதனினும் மிக்க துன்பத்தையுங் கவலையையுந் தலைவற்குத் தரவல்லது பிறிதில்லை. ஓர் அரசன் ஒருகால் தன் பக்கத்திருந்த இருவரில் ஒருவனை நோக்கி, “என் மார்பில் உதைத்தான் கால்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/109&oldid=1579732" இலிருந்து மீள்விக்கப்பட்டது