உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

89

ஊடுருவப் பெற்று ஒளிரும். அதனால் அவர் காலத்தை மறந்து, சிற்றின்ப வேட்கையற்று என்றும் இளைஞராயே திகழுவர்.

குறித்தன்றோ தெய்வத் திருவள்ளுவர்,

“நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்”

(குறள் 460)

என்றும்,

"மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து"

(குறள் 458)

என்றும்,

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு

(குறள் 452)

என்றும் அருளிச் செய்தனர். இக் கருத்துப்பற்றியே நாலடியாரில்,

“தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்

இகலிலர் எஃகுடையார் தம்மிற் குழீஇ

நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத் தும்பர் உறைவார் பதி"

என்னும் அரிய செய்யுளும் எழுந்தது. பார்மின்! இற்றைக்கு ரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே, நல்லிசைப்புலமை மிக்க ஆசிரியர் பிசிராந்தையார் நீண்டகாலம் நரை திரை மூப்பின்றி வாழ்தற்குரிய அகக் காரணங்களிரண்டும் புறக்காரணங் களிரண்டும் எத்துணை நுட்பமாக எடுத்தருளிச் செய்திருக் கின்றார்!

ச்

ஆசிரியர் பிசிராந்தையார் பாடிய இச் செய்யுளினாலும், இவர் காலத்திருந்த ஏனை நல்லிசைப் புலவர்களும், நல்லிசைப் புலமை நிரம்பிய அரசர்கள் அரசியர்களும், முத்தமிழ்ப் புலமை மிக்க மாதர்களும் அருளிச்செய்த அருந்தமிழ்ப் பாடல் களினாலும், அஞ்ஞான்றிருந்த தமிழ்மக்களின் இல்லற வொழுக்கங் காதலன்பிற் பிணிப்புண்ட கணவரும் மனைவியரும் ஒருங்குகூடி நடாத்த நடைபெற்ற வரலாறும்; அத்துணைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/114&oldid=1579738" இலிருந்து மீள்விக்கப்பட்டது