உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் 10

சிறந்த அன்பின் சேர்க்கையிற் றோன்றிய புதல்வர்களுந் தம் பெற்றோர்களைப்போல் அன்புக்கும், அருளுக்கும் அறத்திற்கும் உறையுளாய்த் திகழ்ந்த வரலாறும்; அஞ்ஞான்றை அரசர்களெல்லாருந் தாங் கல்வியில் தலைசிறந்து விளங்கித் தங்கீழ் வாழுங் குடிகளும் அதிற் புலமைமிக்குப் பொலியச் செங்கோலோச்சி வந்தமையால் இருபாலாருந் தீதின்றி நல்வழியிற் செல்லுதலையே கடைப் பிடியாய்க் கொண்டு வாழ்ந்த வரலாறும்; இவ்வாறு எல்லாருங் கல்வியறிவிலும் மேம்படு குணங்களிலும் நாளுக்கு நாட்பிறை மதிபோல் வளர்ந்து வாழ்ந்து வந்தமையால், அவருட் பொருள் வளமின்றி வறுமையால் வாடிப் பிறர்க்கு ஊழியஞ் செய்யப் புக்காரும் அவையிரண்டிலுங் குன்றுதலின்றித் தந் தலைவர் தங் கருத்தறிந்து ஒழுகிப் பயன்பட்ட வரலாறும்; அந் நாட்களிற் கல்வி யறிவு ஆராய்ச்சித் துறைகளின் ஆழங்கண்டு மனநலங் களெல்லாம் ஒருங்கே பொருந்தப்பெற்ற சான்றோர்குழாந் தலைநகரங்களிலும் அவற்றைச் சூழ்ந்த ஊர்களிலுந் தொகை தொகையாயிருந்த வரலாறுந் தெற்றென விளங்குதல் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/115&oldid=1579739" இலிருந்து மீள்விக்கப்பட்டது