உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

11. புலவர்தம் பரந்த தூய துறவுள்ளம்

6

னிப், பழைய நாட் புலவர்களும், அவர்தம் ஆணை வழி நின்று தமது வாழ்க்கையை நன்கினிது நடாத்திய தமிழ் மக்களும் ஒரேயொரு முழுமுதற் கடவுளாகிய முக்கணானைத் தொழுது, தாமெல்லாரும் அம் முதற்பெருங் கடவுளாகிய ஒரே யொரு தந்தைக்கு உரிமைப் புதல்வர்களாம் உண்மைகண்டு, தமக்குள் ஏதும் வேற்றுமை இலராய் இம்மையிலேயே பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்துவந்தனர். பண்டைத் தமிழாசிரியருந் தமிழ்மக்களும், ஒரே முழுமுதற் கடவுள் உலகமே யுருவாய் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றொளிகளையும் மூன்று திருக்கண்களாக் கொண்டு, எல்லா வுயிர்க்கும் புறக்கண் அகக்கண்களை விளக்கி, அவர்தம் மெதிரேநின்று பேரருள் வழங்கும் பான்மையினைத் தெளியக்கண்டு அவனொரு வனையே முக்கணானென்னும் வழுத்தினமை,

“பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே”

பெயரால்

வணங்கி

(புறம் 6)

என்னும் மிகப்பழைய திருப்பாட்டில் அதனாசிரியர் காரிகிழார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி'க்கு அறிவுரை தெருட்டு மாற்றானும், ஆரியராற் போற்றப்பட்ட “இந்திரன், ‘வருணன்’, ‘அக்நி’ ‘மாதரிஸ்வான்”, ‘பிரமன்,' 'விஷ்ணு' முதலியோரெல்லாம் உண்மையிற் கடவுளரல்ல ராய்ப் பிறந்திறக்கும் ஆருயிர்வகையிற் சேர்ந்தவராகலின் அவரெல்லாந் தம்மை யொத்த மாற்றாரால் தமக்குவரும் ஏதங்கள் களைய மாட்டாராய் இளைத்து வருந்தி எல்லாம் வல்ல இறைவனான முக்கணானை வேண்டிக் குறையிரப்ப, இறைவனே அவர்தம் அல்லல் களைந்து அவர்க்கருள் செய்தமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/116&oldid=1579740" இலிருந்து மீள்விக்கப்பட்டது