உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் 10

அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்குப்பின் எழுந்தவை; பிரசிநம், மைத்திராயணீயம், மாண்டூக்யம் என்னும் மூன்றுப நிடதங்களும் ஆகும்; இவை பிற்கால ஸமஸ்கிருத உரை நடை யில் வரையப்பட்டிருக்கின்றன. இப்பதினான்கு

3

உபநிடதங்களுக்கும் வரவரப்பிற்பட்ட காலங்களிலேதாம் ஏனை உபநிடதங்கள் இயற்றப்பட்டனவாதல் ஆராய்ச்சியாற் புலனாகின்றன. வ்வாறு வரவரப் பெருகிய உபநிடதங் களெல்லாம் பழைய தமிழாசிரியர்களாலுந், தமிழ்மக்களுட் பிற் பிற் காலங்களிற் கிளைத்த ஆகம சைவ வைணவ மாயாவாத மதங்களைப் பரவச் செய்தற்கட் கடைப்பிடியாய் நின்றவர் களான அவ்வச்சமய குருமார்களாலும் புதிய புதியவாகவே இயற்றப்பட்டு வந்தன வென்பதூஉம் அவ்வுபநிடதப் பொருள்களை நடுநின்றாராய்தலால் நன்கு விளங்கா நிற்கின்றது.

அற்றேலஃதாக; மிகப் பழைய உபநிடதங்கள் முதன் முதற் றமிழாசிரியர்களாலேதாம் ஆக்கப்பட்டன வென்பதற்குச் சான்று காட்டுகவெனிற், காட்டுதும். முற்பட்ட காலத்தில் எல்லா உபநிடதங்களுக்கும் முற்பட்டதாக இயற்றப்பட்ட பிருகதாரணியாக உபநிடதத்திலேயே பழைய ஆரியப் பார்ப்பனர்க்கு அவரின் முற்றும் வேறான க்ஷத்திரிய அரசர் மெய்யறிவு தேற்றினமை நன்கெடுத்துக் கூறப்பட்டிருக் கின்றது. அது வருமாறு:

வேதநூல் வல்லானான பாலாகி முனிவற்கு மகனான கார்க்கியன் என்பான், காசிமன்னனான அசாதசத்துரு என்பவனை அணுகி,“யான் உனக்கு மெய்ப்பொருள் தேற்ற வந்திருக்கின்றேன்” என்றான். அதற்கு அசாதசத்துரு, "ஆ! உனக்கு நான் ஆயிரம் ஆக்கள் தருகிறேன்! சொல்” என்று விடை தந்தான். அதன்பிற் கார்க்கியன் பன்னிரண்டு வகையாக அதனைச் சொல்ல, அசாதசத்துரு அவன் சொல்லிய ஒவ்வொன்றிலு முள்ள குறை பாட்டை எடுத்துக்காட்டக், கடைசியாகக் கார்க்கியன் மேலேதுஞ் சொல்ல மாட்டானாய் வாயவிந்து வாளாவிருந்தான். அது கண்டு அசாதசத்துரு அவனைநோக்கி, “நினக்கு அத்துணை தான் தெரியுமோ?” என்று வினவ, அவன் “அத்துணை தான்” என்று விடை நுவன்றான். ஆனால், அசாதசத்துருவோ, “பிரமம் அவ்வளவுக்குமேற் செல்லாத அறிவினுள் அடங்குவதன்று”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/137&oldid=1579762" இலிருந்து மீள்விக்கப்பட்டது