உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

இங்ஙனமே, சிவாகமங்களில்

111

சிவாகமங்களில் நுவலப்படுந் திருக் கோயிலமைப்புகளுந், திருக்கோயிற் கிரியைகளும், அவை யிற்றைச் செய்யுங்கால் ஓதும் மந்திரங்களும், பௌஷ்கரம், மிருகேந்திரம் முதலான சிவாகம ஞானபாகங்களிற் கூறப்படும் முப்பொருள் ஆராய்ச்சிகளும், அவற்றின்கண் வழங்கப்படும் பல சொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகளும், பழைய ஆரிய வேதங்கள் பிராமணங்கள் ஆரணியகங்கள் கற்பசூத்திரங்கள் தன்மசூத்திரங்கள் முதலியவற்றில் ஒரெட்டுணையுங் காணப் படாமையின், இவையெல்லாம் இச்செந்தமிழ் நாட்டிலிருந்த பெரியார்களால் ஆக்கப்பட்டன வென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்காநிற்கின்றன.

அற்றேற், சிவாகம ஞானபாகங்களிற் காணப்படுங் கடவுள் உயிர் மலங்களைப்பற்றிய ஆராய்ச்சியோ டொத்தவை, வடமொழி யுபநிடதங்களிலுங் காணக்கிடத்தலால், அவையெல்லாந் தமிழாசிரியர்களாலேதாம் ஆக்கப்பட்டன வென்றல் யாங்ஙன மெனிற் கூறுதும்; காலங்கடோறும் புராணங்களும் ஆகமங்களுந் தலபுராணங்களும் புதிய புதியவாய் ஆக்கப்பட்டு வந்தமை போல, உபநிடதங்களுங் காலங்கடோறும் பற்பல சமயத்த வராலுந் தத்தஞ் சமயக் கொள்கைக்கிணங்கப் பற்பலவாகச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. முக்திபோக நிடதத்தில் நூற்றெட்டு உபநிடதங்கள் அது தனக்குமுன் இருந்தனவாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. வடமொழிவல்ல வீபர் என்னும் ஆசிரியர் தம்மாற் கண்டுபிடித்துக் கணக்குச் செய்யப்பட்டவை இருநூற்று முப்பத்தைந்து உபநிடதங்களென்று தெரிவித் திருக்கின்றார். மகமதிய வேந்தரான அக்பர்காலத்திற் செய்யப்பட்ட ‘அல்லா உபநிஷத்' ஒன்றும் உளதென்று வேதநூலாராய்ச்சியில் வல்லுநரான பிகாரிலால் சாஸ்திரி

1

என்பவர் வரைந்திருக்கின்றார்.?

என்றாலும், பிருகதாரணியகம், சாந்தோக்யம், தைத்திரியம், ஐதரேயம், கௌஷீதகி, கேநம் முதலிய ஆறு உபநிடதங்களும் மிகப் பழைய காலத்தனவாகும்; இவை உரைநடையில் ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்குப்பின் ஆக்கப்பட்டவை: கடம், ஈசம், சுவேதாசுவதரம், முண்டகம், மகாநாராயணம் என்னும் ஐந்துபநிடதங்களும் ஆகும்; இவை செய்யுள் நடையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/136&oldid=1579761" இலிருந்து மீள்விக்கப்பட்டது