உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் 10

எரிந்து மிச்சமாவது சாம்பற்பொடியே யாதலால் அத் தீ வணக்கத்தின்பின் அச் சாம்பற் பொடியாகிய திருநீற்றை எடுத்து நெற்றியில் தீற்றிக்கொள்வது தமிழ்மக்களுட் பண்டு தொட்ட வழக்கமாய்ப் போதருகின்றது. ஆரியர்க்குள் வழக்கம் இல்லாமையின், திருநீற்றுக்குப் பெயரான ‘விபூதி என்னும் வட சொல்லும், அதனை நெற்றியிலிடும் வழக்கமும் நால்வேதங்களிலும் பிராமணங்களிலும் எங்குங் காணப்பட

வில்லை.

இங்ஙனமே, உருத்திரனுடைய கண்களாகக் கொண்டு தமிழ்மக்கள் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமது கழுத்தில் அணிந்துவருங் கொட்டைக்கு வடமொழிப் பெயராகிய 'உருத்திராட்சம்' என்னுஞ் சொல்லும் பண்டை ஆரிய நால்வேதங்களிலும் அவற்றின் வழி வந்த நூல்களிலும் யாண்டுங் காணப்படவில்லை.

ஒதுதலும்

னி, ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமேலாக எந்த நூலை ஓதத் துவங்கினாலும், எந்த வினையைச் செய்யப் புகுந்தாலும் முறையே ‘ஓம்' என்னும் ஒலியாகிய பிரணவத்தை முன்வைத்தும், அவ்வோம் என்னும் வடிவிற்கு அடையாளமான விநாயகரை முன்நிறுத்தியும் வழிபடுதலுஞ் செய்வாரான தமிழ்மக்களின் வழக்கம், பண்டை ஆரியநூல்களிற் சிறிதுங் காணப்படவில்லை. பிரணவம் என்னும் பெயராதல், விநாயகரென்னும் பெயராதல், விநாயகர்க்கு இளவலாக வைத்து வழுத்தப்படுந் தமிழ்தெய்வமாகிய முருகன்றன் வடமொழிப் பயர்களான சுப்பிரணியன்' 'கார்த்திகேயன் கார்த்திகேயன்' 'ஸ்கந்தன்' முதலான பெயர்களாதல் ஆரிய நான்மறைகளிற் சிறிதுங் காணப்படுகின்றில. 'ஓம்' என்னும் பிரணவத்தின் வடிவு ஆரியமந்திர வரிகளினிடையே வரையப்படுங்கால் ‘ஓ' என்னுந் தமிழ் எழுத்தின் வடிவாகவே தீட்டப்படுதலானும், ஓசையைக் குறிக்கும் ஓதை, ஓசை, ஒலி என்னுந் தமிழ்ச் சொற்கள் ஓகாரத்தை முதலிற் கொண்டாற்போல ‘ஸப்தம்,' 'த்வநி’ முதலான வடசொற்கள் ஓகாரத்தை முதலிற் கொண்டிலாமை யானும் ஓங்காரமாகிய பிரணவந் தமிழ்மொழிக்கே உரித் தாதலைப் “பிரணவசொரூபம்” “திருவாசக விரிவுரை” முதலான எம்முடைய நூல்களில் முன்னரே விளக்கிப் போந்தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/135&oldid=1579760" இலிருந்து மீள்விக்கப்பட்டது