உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

109

அவர்பால் எல்லாம் வல்ல இறைவனியல்பும், உயிர் களியல்பும், மும்மலவியல்பும், உயிர் மும்மலப் பிணிப்பு நீங்கி இறைவன் றிருவருளின்பத்தைத் தலைக்கூடுமாறு மெல்லாம் அறியத் துவங்கிய பின்னரே, இப் பொருள்களின் பெயர்களும் விளக்கங் களும் எசுர்வேதத்திலும, அதற்குப் பின்வந்த ஆரியமொழி நூல்களிலும், அவற்றிற்கும் பின்வந்த உபநிடதங்களிலும், அவற்றிற்கும் பிற்றோன்றிய சாங்கியம், யோகம், நையாயிகம், வைசேடிகம், வேதாந்தம், இதிகாசம், புராணம் முதலிய வற்றிலுங் காலங்கடோறும் மிகுதியாய் இயற்றிச் சேர்க்கப் படலாயின. வடநூல் தமிழ் நூல்களின் காலவெல்லை களையும், அவ்வக்கால வெல்லைகளிற் றோன்றிய அவ்வம் மொழிநூல்களையும் நுனித்தாராய்ந்து ஒத்து நோக்கிக் காண்பார்க்கு யாம் ஈண்டுக் காட்டிய உண்மைகளெல்லாம் பிரிந்தினிது விளங்காநிற்கும். அதுகிடக்க.

இனி, மேற்காட்டிய இறைவன் பெயர்களாகிய ஈசானன், மகாதேவன், அம்பிகாபதி, உமாபதி முதலியனவே யன்றிச், சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் ஐந்து சிவதத்துவப் பெயர்களும், அவ்வைந்தில் முதன் மூன்று தத்துவங்களில் வைகுவாரான வித்தைஈசர், மகேசுரர், சதாசிவர் முதலான கடவுளர்களும், அவர் தம்மைப் பொதுவகையிற் குறிக்கும் விஞ்ஞானாகலர், பிரளயாகலர் முதலிய சொற்களும் இருக்கு முதலான நான்கு வேதங்களிலும் ஒரு திணையளவு தானுங் காணப்படுகின்றில.

இன்னும், மேற்காட்டிய சிவபிரான் பெயர்கள், சிவதத்துவப் பெயர்கள், சிவதத்துவங்களில் வைகும் விஞ்ஞானாகலர் பிரளயாகலர் பெயர்கள் முதலியனவே யன்றிக், காலம் நியதி கலை வித்தை அராகம் புருஷன் மாயை என்னும் ஏழு வித்தியா தத்துவப்பெயர்களும், அவற்றின் கண்நின்று அவற்றை யக்குவாரான அனந்தர் சீகண்டர் முதலான கடவுளர் பெயர்களுங்கூட இருக்கு முதலான நால்வேதங்களிலாதல், அவற்றிற்குப் பின்வந்த பிராமணங்களிலாதல் ஒரு சிறிதுங் காணப்படுகின்றில.

இனிச், சிவபிரானைத் தீவடிவில் வைத்து வணங்கி, எல்லா உலகமும் எல்லா உலகப்பொருளுந் தீயினால் எரிக்கப்பட்ட வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/134&oldid=1579759" இலிருந்து மீள்விக்கப்பட்டது