உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம்

10

நாட்டுட் புகுந்து குடியேறிப், பண்டைத் தமிழ்மக்களோடு உறவாடி வாழலான போதுதான், அவர் வணங்கிப் போந்த உருத்திரனைத் தாமும் வணங்கலாயின ரென்பது துணியப்படும்.

இங்ஙனமாக உருத்திரனை வழுத்தும் பதிகவுரைகள் சிலவற்றை இருக்குவேதத்தின்கட் புகுத்திவைத்தாற் போலச், சிவபிரானை வழுத்தும் பதிகவுரை ஒன்றையேனும் பண்டைத் தமிழ்ப் பெரியார் அதன்கட் புகுத்தாவிடினுந், தம்மோடு ஆரியர்க்குண்டான தொடர்பு வளரவளர, உருத்திரனுஞ் சிவபிரானும் ஒருவரே யென்பது அவர்க்குப் புலனாகல் வேண்டி, அவர் இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தில் உருத்திரன் மேற்றான 92 ஆம் பதிகத்தின் 9 ஆஞ்செய்யுளில் 'ஏபி : சிவ: ஸ்வவாந் ஏவயாவபிர்' எனச் 'சிவன்' எனுஞ் சிறப்புப் பெயரைப் புணர்த்தோதி வைத்தமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று.

இவ்வாறு ஆரியர் முதன்முதற் றம்மொடு தொடர்பு கொண்டு பழகத்துவங்கிய இருக்குவேத காலத்தே, பண்டைத் தமிழ்ச் சான்றோர் அவர்க்கு மாயையுள் நின்ற உருத்திரனையன்றி, மாயையைக் கடந்துநின்ற சிவபிரானைக் காட்டாது மறைத்து வைப்பினும், அவர்க்குந் தமக்கும் உண்டான பழக்கம் முதிர முதிர அவருட் டூயராயினார் தமக்கு அணுக்கராகித் தமக்குத் தொண்டுபூண் டொழுகக் கண்டபிற், றாம் அவர்பால் இரக்கம் மிக்குடையாராகிப், பிற்காலத்ததாகிய எசுர் வேதத்தினிடை நடுவே சிவபிரான் மேற்றாகிய 'திருவுருத்திரம்' என்னுஞ் சிறந்த வழுத்துரையினை யியற்றிச் சேர்த்தருளினார். அத் திருவுருத்திரத்தின் நடுவில் (4-5-87) ‘நமச்சிவாயச் சிவதராயச என்னுஞ் சொற்றொடருந், 'தைத்திரீய ஆரணியகத்’ தில் (10-16– 34) ஸர்வலிங்காயநம : சிவாயநம : சிவலிங்காயந : என்னுஞ் சிறந்த சொற்றொடரும் வருதல் காண்க. ‘சதருத்ரீயம்' என்னும்பகுதி தனித்ததோர் உபநிடதமாய் வியாசராற் செய்யப்பட்டுப் பின்னர்ச் சுக்கில எசுர்வேதத்தி னிடையே சேர்க்கப்பட்டதென ‘யசோமித்திரர்' என்னும் பௌத்த ஆசிரியர் கூறுமுரையும் கூற்றிலுண்மையை நிறுவுதற்கொரு சான்றாய்

எமது

நிலவுகின்றது!

1

இங்ஙனமாக, ஆரியமுனிவர் தமிழ்ச் சான்றோரின் மெய்யறிவு மாட்சி தெரிந்து, அவர்க்குத் தொண்டராகி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/133&oldid=1579758" இலிருந்து மீள்விக்கப்பட்டது