உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் - 10

பண்டை ஆரியர் ஆடுமாடுகள் மேய்த்துக்கொண்டும், அவை தம்மைக் காப்பதற்கு நாய்கள் வளர்த்துக் கொண்டும், அவற்றின் மேய்ச்சலுக்காகப் புற்பூண்டுகள் செழித்துப் பச்சென்றிருக்கும் நிலங்களைத் தேடிக் கொண்டும் நடு ஆசியாவிலிருந்து அதன் தெற்கே 'நடுநிலக்கட' லோரங்கள் வரையிலும், ஐரோப்பாவின் நடுப்பகுதிகளிலும் பஞ்சாப்பிலுஞ் சென்று பரவினர். “அந் நாட்களில் அவ் வாரியக் குழுவினர் வணங்கிய தெய்வங்கள்: தியாவா, பிருதிவி, தையஸ், மித்திரன், வருணன், வலன், அத்திரி, மருத்துக்கள், பகலிரவுகள், வைகறை, பர்ஜந்யன் முதலியோராவர். இரும்பு, செம்பு, பொன், வெள்ளி முதலியவைகளை அவர் அறியார். விலங்குகளின் தோலையும் மரங்களினின்றும் உரித் தடுத்த பட்டைகளையுமே உடைகளாக உடுத்திருந்தனர். அவர்களுக்கு நூறுவரையிற்றான் எண்ணத்தெரியும். தாஞ் சன்ற நாடுகளிற் றமக்குமுன் குடியேறியிருந்த 'துராணியரர்’ 'மங்கோலியர்' முதலான மக்கட்பிரிவினருடன் உண்ணல் கலத்தல்களை ஏதொரு தடையுமின்றிச் செய்து வந்தனர். அவர்கட்கு அப்போது உழவுத்தொழிலே தெரியாதாகையால், உழவுத்தொழில் வளத்தாற் பெருஞ் செல்வராய் வாழ்ந்த பண்டைத் தமிழ்மக்களின் நாடுநகர்களின் புறங்களிற் புகுந்து வைகி, வகி, அவர் களுடைய ய ஆடுமாடுகளையும் உணவுப் பொருள்களையும் பிற பண்டங்களையுந் திருடிச் சென்று அடர்ந்த காடுகளினுள்ளும் மலைமுழைஞ்சுகளிலும் ஒளிந்திருந்து காலங்கழித்தனர், என்று ‘அபிநாஸ் சந்திரதாசர்’ வரைந்திருக்கின்றார். ப் பெற்றியினரான பழைய ஆரியர் இவ்விந்திய நாட்டின் வடமேற்கேயுள்ள பஞ்சாபு தேயத்திற் குடிபுகுந்து, ஆண்டு நின்றும் அதன் கிழக்கே கங்கையாறு பாயும் நாடுகளிலுங், கங்கையாற்றின் தெற்கே விந்திய மலைவரையிலுள்ள நிலப்பகுதிகளிலும், விந்தியமலைக்குந் தெற்கே கோதாவரியாறு பாயும் இடங்களிலும், அதற்குந் தெற்கே குமரிமுனை வரையிலும் நாளேற நாளேறப் படிப்படியே பரவி, அவ் வாரியர்க்கு முன்னே ஆங்காங்கே நாகரிகத்திற் சிறந்தாராய் உயிர்வாழ்ந்த தமிழ் வேந்தர்களாலுந், தமிழ்ச் செல்வர்களாலும், தமிழ்ப் பொது மக்களாலும் உதவப்பட்ட உண்டியும் உடையும் உறையுளும் பெற்றுப், பின்னர் அவரிற் சான்றோராயினார் ஆராய்ந்தறிந்த இலக்கண இலக்கியக் கலையறிவுகளும் அவர் அறிவுறுத்த

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/141&oldid=1579766" இலிருந்து மீள்விக்கப்பட்டது