உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

117

அறிந்து, தாம் வணங்கிப்போந்த வருணன் மித்திரன் இந்திரன் முதலியோரெல்லாம் போர்க்களத்தில் இறந்து பட்ட மறவரின் ஆவிகளேயாதலால் அவரெல்லாங் கடவுளர் ஆகாமையும், பிறப்பிறப்புக்களிற் சுழலும் எல்லா உயிர்களையும் அவ்வுயிர் களிருக்கும் உலகங்களையுந் தோற்றுவித்துச் சுழற்றுவது பிறப்பிறப்பில்லா எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய உருத்திரசிவம் ஒன்றேயாதலும் அவர் தேற்றத் தெளிந்து வாழ்க்கை செலுத்துலாயினர். இவ்வாறு மிகவுங் கீழ்ப்பட்ட நிலையிலிருந்த பண்டை ஆரியர், இவ் விந்திய நாட்டுட் புகுந்து, ஈண்டு அவர்க்கு முன்னமே நாகரிகத்தில் தலைசிறந்து விளங்கிய பண்டைத்தமிழ் மாந்தருதவியால் நாகரிகம் எய்தி வாழ்ந்த வரலாறுகளை உண்மையான் ஆராய்ந்தறியாமல், இவ் விந்துதேய வரலாறு வரைந்தார் சிலர், ஆரியரே பண்டுதொட்டு நாகரிகத்தின் மிக்காராய்த் திகழ்ந்தனரென்றும், அவ் இவ் இந்திய நாட்டுட் புகுந்து தமிழ்மக்களைப் போரில் வென்று அவரை யெல்லாந் தமக்கடிமை ஆக்கினரென்றும், அவ் ஆரியரின் நாகரிகத்தில் ஒரு சிறுகூறே தமிழர் பெற்றனரென்றும் ஏதொரு சான்றுங் காட்டாது, தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொய்யும் புளுகும் புனைந்து கட்டிக் கூறினர்.

மற்று, இருக்குவேதப் பழம்பதிகங்களோ, ஆரியர் அலைந்துதிரியும் மேய்ப்பராய் இருந்தமையுந், தமிழர் நாடு நகரங்கள் வகுத்து வலிய கோட்டைகளிற் பகையச்சமின்றிச் செல்வத்திற் செழித்திருந்தமையும் நன்கெடுத்து நுவல்கின்றன. ஆரியர் பூஷணை வேண்டி வழுத்திய இருக்குவேத முதன் மண்டில 42ஆம் பதிகத்தில்,

66

ஓ பூஷனே! எங்களுடைய வழிகளைச் சுருங்கச் செய், வழியிலுள்ள இடையூற்றை அகற்று.

எம்மொடு கூடி எமக்கு முன்னேசெல், முகிலிற் றோன்றிய முதல்வனே!

எமது

எமக்குத் தீங்கிழைக்கும் பொருட்டுப் பதுங்கியிருக்கும் பொல்லாத தீக்குறியான ஓநாயை, வழியினின்றுந் துரத்து, பூஷனே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/142&oldid=1579767" இலிருந்து மீள்விக்கப்பட்டது