உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் 10

கள்ளநெஞ்சினனான கொள்ளைக்காரன் யாங்கள் செல்லும் வழியினருகே ஒளிந்திருக்கின்றான்; அவனை அவ் வழியினின்றும் பின்றொடர்ந் தோடச்செய்!

யாங்கள் செல்வத்தை எளிதில் அடையுமாறு செய்! புல்லடர்ந்திருக்கின்ற மேய்ச்சல் நிலங்களுக்கு எம்மை வழிகாட்டிச் செலுத்து! எங்கள் வழியிலே விரைந்து வெப்பம் வராமற் செய்!

எம்பால் அருளுடையையாய் இரு! எமக்கு வயிறு நிறைய உணவுகொடு! எமதுடம்புக்கு உரம் ஏற்று!

எனப் போந்த வேண்டுகோளுரையால் பண்டை யாரியர் தொலைவான இடங்களிலுள்ள மேய்ச்சல் நிலங்களைத் தேடி நெடுவழி நடந்து எய்த்தமையும், அவர் சென்ற நெறிகளிலே ஓநாய்களுந் கள்வர்களும் பதுங்கியிருந்து அவர்க்குத் தீங்கிழைத்தமையும், அவர்கள் பொருளுக்குப் பெரிதும் மிடிப்பட்டமையும், ஒருவேளை கூட வயிறார உண்ணுதற்கு உணவு கிடையாமற் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து அவர்கள் பெருந் துன்புழந்தமையும் நன்கு புலனாதல் காண்க.

இனி, அவ் இருக்குவேத முதன் மண்டிலத்தின் கண்ணதான 44 ஆம் பதிகத்தில் இந்திரனைநோக்கி ஆரியர் செய்து

காண்ட

66

என்றும்,

னவான,

இந்திரனே, நீ நின் துணைவர்களுடன் சென்றாலுஞ்,

செல்வத்தில் சிறந்த தஸ்யுக்களை நீயே தனியாக நின் குலிசப்படையாற் பிளந்து கொன்றனை! கிரியைகளைச் செய்யாத அப் பண்டை மக்கள் வான் நிலத்தினின்றும் பலமுகமாய்ச் சிதர்ந்தோடிச் சேய்மைக்கண்ணே அழிந்துபட்டனர்.’

“பொன்னணிகளாலும் மணிக்கலங்களாலுந் தம்மை ஒப்பனை செய்து கொண்ட அவர்கள் இந் நிலத்தை மறைத்து ஓர் ஆடை விரித்தார்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/143&oldid=1579768" இலிருந்து மீள்விக்கப்பட்டது