உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

14. பிற்காலத் தமிழ்ப்புலவர்

வ்வாறு திருவள்ளுவர் காலத்திற்குப் பின்னேயிருந்து உமாபதிசிவனார் காலத் திறுதிவரையில் திகழ்ந்த இடைக் காலம் போக, அதற்குப் பின் அறுநூறு ஆண்டுகளாகச் சல்லுங்காலமே தமிழ்மொழிக்குப் பிற்காலமெனவும், இதன்கண் இருந்த தமிழ்ப் புலவர்களே பிற்காலத் தமிழ்ப் புலவரெனவும் பகுத்தறிதல் வேண்டும். இப் பிற்காலத் தமிழ்ப்புலவரிற் பெரும்பாலார் தமிழுக்கு ஆக்கமாவது ஏதேனுஞ் செய்தனரோவென்று ஆராய்ந்துபார்ப்பின், அவர் அத்தகைய தேதுஞ் செய்தில ரென்பதே தெளியப்படுகின்றது. ஆக்கமாவது செய்யாதொழியினும், அதற்குக் கேடு தருவதேனுஞ் செய்யாது வாளா இருந்திருப்பரேல் அதுவே அவர் தமிழுக்குச் செய்த ஆக்கமாகும் ஆனால், அவர், பண்டைத் தமிழாசிரியரும் அவர்க்குப்பின் இடைக்காலத்தே வந்த தமிழாசிரியரும் செந்தமிழ் மொழியை இயற்கைச் சொற்பொருள் வகையிற் பேணியவாறுபோற் பேணாது, அவரொடு திறம்பிச் செயற்கைச் சொற்பொருட் குறுநெறியே புகுந்து அதனொளியையும் வனப்பையுங் குறைத்து அதனைக் குற்றுயிருங் கொலையுயிருமாய் வலிவிழந்து கிடக்கச்செய்தனர். இவர் இங்ஙனஞ் செய்யலானது, பண்டைத் தமிழ்வளனும் அதனையோம்பிய பேராசிரியரின் நுண்மான் நுழைபுலனும் ஒரு தினையளவுதானும் இவர் ஆராய்ந்து அறியப் பெறாமை யினாலேயாம். சொல்வகையானும் பொருள் வகையானும் இவர் தமிழுக்கிழைத்த தீங்கு பெரிது! பெரிது!

இவர் சொல்வகையாற் செய்த தீங்கு, ‘தலைக்குத்தக முடியமைப்பேன்' என்னாது, 'முடிக்குத்தகத் தலையைச் சீவுவேன்' என ஒரு பொற்கொல்லன் முடிவேண்டினார் தலையை ஒரு கூர்ங்கத்தியாற் சீவப் புகுந்தாற்போல, இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/150&oldid=1579775" இலிருந்து மீள்விக்கப்பட்டது