உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இவ்வாற்றால்,

மறைமலையம் - 10

திருவள்ளுவர் காலத்துக்கு ஒரு

நூற்றாண்டு கழித்துத் தோன்றிய 'சிலப்பதிகார’ ‘மணிமேகலை' காலத்திருந்து, அவர்க்குப்பின் ஓராயிரத்து முந்நூறியாண்டு வரையிற் றோன்றிய இடைக்காலத்துத் தமிழாசிரியர் அத்தனை பெயருந், தமக்குமுன்னிருந்த பண்டைத் தமிழாசிரியர் ஆழ்ந்தாராய்ந்து கைக்கொண்ட கொள்கைகளையே ஓர் இம்மியளவும் பிழையாது தாமுந் தழீஇ அவற்றிற் கடைப் பிடியாய் நின்றனரேனும் வடநாட்டினின்றும் புகுந்து வைகிய பௌத்தர் சமணர் ர் மாயாவாத வைணவப் பார்ப்பனர் முதலாயினார்க்கு மெய்யறிவுச் சுடர்கொளுவுதற் பொருட்டு, அவர் கொணர்ந்து மிகுத்துவழங்கிய வடமொழியைத் தாமுங் கையாண்டு, தம்முடைய கோட்பாடுகளை விளக்குஞ் சொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகள் கதைகள் முதலானவைகளை வடமொழியினாலேயே தாமும் வழங்கத் தலைப்பட்டனர். அதனால், திருவள்ளுவர் காலம்வரையில் மிகவுந் தூயதாய்ச் சுடரொளி விரிந்து திகழ்ந்த தனித்தமிழ் ஞாயிறு அதற்குப் பின்னர்த்தாகிய இவ் இடை டைக்காலத்தில் உண்டான வடமொழிக் கலவையாகிய கலவையாகிய மூடுபனியால் மூடுபனியால் தனது தூய பேரொளி சிறிதுசிறிதே மங்கித் தோன்றியதாயினும், அப் பனியினைத் தனது பேரொளிவெப்பத்தால் உரிஞ்சித், தனதியற்கையொளி குன்றாமலே விளங்கி இயங்கியது. இவ்வாறு தனித்தமிழ் ஞாயிறு தனது தூய பேரொளி குன்றாதே விளங்கியகாலம், சைவசித்தாந்த ஆசிரியரில் இறுதியாக நின்றவரான உமாபதி சிவனார் வயங்கிய காலம் வரையிலேயாம். இவ்வுமாபதி சிவனார் 'சங்கற்பநிராகரணம்' என்னும் நூல் இயற்றிய காலம் இற்றைக்கு 623 ஆண்டுகளக்கு முன்னென்பது அந் நூற்பாயிரங் கூறுமாற்றால் நன்கு பெறக்கிடக்கின்றது.

தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/149&oldid=1579774" இலிருந்து மீள்விக்கப்பட்டது