உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

123

இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு வேதங்களும், இதிகாசபுராணங்களும், வியாகரணம் முதல் தேவஜனவித்தை ஈறான பதினான்கு கலைகளும் உணர்ந்திருக்கின்றேன். இறைவனே! யான் உணர்ந்தனவெல்லாம் மந்திரங்கள் அல்லது வெறுஞ் சொற்களே யன்றி, அவற்றின் உண்மைப் பொருள் அல்ல. உலகத்தில் துன்புற்றவர்கள் தேவரீரை அடைந்து அத் துன்பம் நீங்கப் பெறுவரென்று கேள்வியுறுகின்றேன். பெரும, யானும் மனங் கவன்று கலங்குகின்றேன், அதனைத் தீர்த்தருளும்!” என்று வேண்டச், சநற்குமாரர் “நீ கொண்டாடிய வேதங்களுங் கலைகளுமெல்லாம் வெறும்பெயர்களேயன்றி வேறல்ல. மற்று, அப்பெயர்கட்கு மேலாகவுள்ள மெய்ப்பொருளியல்பினை அறிவுறுத்துகின்றாம். கேள்!” என நுவன்று, அதன்மேல் அம் முழுமுதற் பெரும்பொருளியல்பினை அவற்கு விரித்து விளம்பினாரென்பது சொல்லப்பட்டிருக்கின்றது. இங்கே ரியமுனிவனாகிய நாரதற்கு உண்மைப் பெரும்பொரு

ஒரு

ளியல்பினை அறிவுறுத்தினவர் தமிழ்த்தெய்வமாகிய முருகப் பிரானே யென்பது குறிக்கப் பட்டிருத்தலால், மெய்ப் பொருளுணர்வு அந்நாளில் தமிழாசிரியர்மாட்டேதான் விளங்கியதென்பது ஒருதலை. முருகப்பிரானே வடநூல்களிற் சனற்குமாரர்' என வழங்கப் படுவர். என்றிதுகாறும் விளக்கியவாற்றாற், பழைய ஆரிய வேதப்பதிகங்கள் ஒருசில வற்றிற் காணப்படும் முழுமுதற்கடவுளுணர்வும், அக்கடவுட் பெயர்களான ‘உருத்திரன்,' 'சிவன்' என்னுஞ் சொற்களும், அக்கடவுளையும் அதனின் வேறான சிற்றுயிர் களையும் அச் சிற்றுயிர்களைப் பிணித்த மும்மல இயல்பு களையுந் தெரிக்குஞ் சொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகளும், ஆரியர் வணங்கிய இறந்தோராவிகள் தெய்வங்களாகாமையும், பிறப்பிறப்பில்லா முதற்பெரும் பொருளாகிய சிவம் ஒன்றே உலகுயிர்களைத் தோற்றுவித்த முழுமுதற்கடவுளாதலும் பிரித்து விளக்குஞ் சில புராணகதைகளுஞ், சைவசித்தாந்த உண்மைகளை அகத்தடக்கிய பழைய உபநிடதங்களும், அவ்வுண்மைகளை ஆராய்ந்து தெளிதற்குக் கருவிகளான சாங்கியம் யோகம் நையாயிகம் வைசேடிகம் வேதாந்தம் முதலான நூல்களும் பண்டைத்தமிழாசிரியர் ஆரியமொழியில் ஆக்கிவைத்தனவாதல் நன்கு தெளியப்படுமென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/148&oldid=1579773" இலிருந்து மீள்விக்கப்பட்டது