உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் - 10

சொல்லிவைத்துப், பின்னர். அவர்கள் பார்ப்பனரைப் பருமைப்படுத்தாமையானுந், தாஞ் செய்யுஞ் சிறந்த வினைகளுக்குப் பார்ப்பனருடைய கருத்துக்களைக் கலந்து அவற்றைச் செய்யாமையானும் அவர்கள் சூத்திராயினரென்று அம் மநுநூலில் எழுதி வைத்திருக்கின்றனர் (மநு: 10-43-44) ஆகவே, தமக்கு எல்லாவகையான உதவியுஞ் செய்து தம்மைக் காண்டாடும் வரையில் தமிழர்களையுந் தமிழ்வேந்தர் களையும் ‘க்ஷத்திரியர்' என்னும் வடசொல்லால் உயர்த்துக் கூறுதலுந், தம்முடைய இரண்டகச் செயலையும் படிற் றொழுக்கத்தையுந் தெரிந்துகொண்டு தமக்குச் செய்து போந்த உதவிகளை அவர் நிறுத்தித் தம்மைப் பாராட்டு தலையுங் கைவிட்டபிற், சிறிதும் நன்றியறிதலின்றி அவர் தம்மை யெல்லாஞ் 'சூத்திரர்’ ‘தாசர்’ ‘தஸ்யுக்கள்' என்னும் இழி சொல்லால் இழித்துக் கூறுதலும் ஆரியர்க்கும் அவர்தம் ஒழுகலாற்றை விடாப்பிடியாய்க் கைக்கொண்ட பார்ப்பனர்க்கும் இயற்கை இரண்டகச் இரண்டகச் செயல்களாய்ப் படிந்துவிட்ட என்றாலுந், தம்மை யடுத்துவேண்டிய ஆரியப் பார்ப்பனர்க்குப் பழந்தமிழாசிரியர்கள் சிறிதும் ஒளியாமலே மெய்ப்பொருள் அறிவுறுத்தி வந்த உயர்குணமாட்சி, மேலே பிருகதாரணிய கோபநிடதத்தினின்றுஞ் சாந்தோக்கிய உபநிடதத்தினின்றும் எடுத்துக் காட்டிய இரண்டு மெய்ந்நிகழ்ச்சிகளாலும் இனிது விளங்காநிற்கும்.

ன.

இன்னும், அச் சாந்தோக்கிய உபநிடதத்திலேயே (5.11.24) ‘உத்தாலக ஆருணி' என்னும் பெயர்போன ஆரியகுரு, தம்பால் வைஸ்வாநர ஆன்மாவைப் பற்றித் தெளிதல்வேண்டிப் போந்து உசாவிய கலைவல்ல பார்ப்பனர் ஐவர்க்கு, அதன் உண்மை தெரிவிக்கும் மெய்யுணர் வில்லாராய்க் கலக்கமெய்திப், பின்னர் அவ் ஐவரோடும் ‘அசுவபதி கைகேயன்' என்னுந் தமிழ் மன்னன் பால் அணுகித், தமது சிறுமையுந் தாம் வினாய மெய்ப் பொருளின் பெருமையும் அவனால் ஒருங்கு அறிவுறுக்கப் பட்டுத் தெளிந்த உண்மைவரலாறு நன்கெடுத்து உரைக்கப் பட்டிருக்கின்றது.

இன்னும், அச் சாந்தோக்கியத்தின் ஏழாம் இயலிலே, நாரதமுனிவன் சநற்குமாரரை அணுகிப், “பெருமானே!' யான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/147&oldid=1579772" இலிருந்து மீள்விக்கப்பட்டது