உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

121

தனது விருப்பத்தைத் தவிரத் தனக்கு வேறு உரிமை தன்னையே

ஒன்றுமில்லாதவன்

தான்

சார்ந்திருக்கின்றான்; நீரினிடையே நுரையினையே அள்ளித் தன்மேற் சொரிந்து கொள்கின்றான்.

குயவன்றன் மனைவியர் இருவருமோ பாலிலே தலை முழுகுகின்றனர்!அவர்கள் சிபாயாற்றின்

ஆழத்திலே அமிழ்த்தப்படுவாராக!

எனப் போந்த வேண்டுகோளுரையிற், குயவன் என்னுந் தமிழ் மன்னன்றன் மனைவிமார் இருவரும் மிக்க செல்வ வளத்தொடு நீராடுதல் கண்டு கண்டு மனம்பொறாது வயிறெரிந்து, அவர் களிருவரும் நீராடுஞ் சிபாயாற்றின் ஆழத்திலே அமிழ்த்தப் படுகவெனக் கூறிய வன்கண்மையை நோக்குங்கால், ஆரியர்கள் பண்டைத் தமிழரின் செல்வ வாழ்க்கையைக் கண்டு எத்துணை நெஞ்சம்புழுங்கி அவிந்தனரென்பது புலப்படவில்லையா? ங்ஙனமே வறுமையிலுழன்று வதங்கிய ஆரியர் தமிழரின் வளவிய நாகரிக வாழ்க்கையைக் கண்டு வயிறெரிந்து வைத வசவுகளையெல்லாம் ஈண்டெடுத்துரைப்பின் இது மிக விரியும். எமது “பண்டைத் தமிழர் ஆரியர்" என்னும் நூலில் இதன் விரிவுகளைக் காண்க. என்றிதுகாறும் விளக்கியவாற்றாற், பழைய ஆரியர் தாம் வணங்கிய சிறு தெய்வங்களை நோக்கித், தமிழரை வைதுரைத்த உரைகள் அவர்கள் தாம் அடைந்த வெற்றியினைக் குறியாமல், அவர்களது மிடிப்பட்ட வாழ்க்கையினையும் அவர்களது பொறாமையுள்ளப் ப் பான்மையினையுமே குறிக்கின்றனவென்று உணரற்பாற்று. பண்டைத்தமிழர் நாகரிகத்தானும் நுட்பவறிவின் திறத்தானும் படைவலியில் மிக்காராய் விளங்கினமையின், அவர் எஞ்ஞான்றும் ஆரியரால் தோல்வியடைந்ததிலர். மற்றுப், புதிதுவந்த ஆரியர்க்கு உண்டியும் உடையும் உறையுளும் நல்கி, அவர்க்கும் பிறர்க்கும் வேந்தராயும், அவர்க்கு நல்லறிவுச் சுடர்கொளுவிய ஆசிரியராயுமே வென்றிபெற்று விளங்கினர். எனவே, ஆரியர்க்கு மெய்யறிவு தேற்றிய க்ஷத்திரியரென்பார் தமிழ்மன்னர்களேயாதல் தெற்றெனத் துணியப்படும். மநுநூல் ஆக்கிவைத்த பார்ப்பனர்களே, சோழவேந்தர்களையும் ஏனைத் தமிழர்களையும் முதலில் க்ஷத்திரிய இனத்தவர் இனத்தவர் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/146&oldid=1579771" இலிருந்து மீள்விக்கப்பட்டது