உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தகர்த்து

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

இங்ஙனம் பலவகையானும் நாகரிகத்திற் சிறந்தாராய், மெய்யுணர்விலும் மந்திர ஆற்றலிலும் மிக்கோங்கி வலியராய்த் திகழ்ந்த பண்டைத் தமிழ்மக்களை, ஓரிடத்தும் நிலை பெறுதலின்றி ஊர் ஊராய்த் திரிந்து உண்டிக்கும் உடைக்கும் மிடிப்பட்டு வந்த பழைய ஆரியர் போரில் வென்றாரெனப் புகல்வது எட்டுணையேனும் பொருந்துமோ? அற்றேல், அவர் வணங்கிய இந்திரன், தஸ்யுக்களைத் தன் குலிசப்படையாற் கொன்றனனென்றும், இலிபிசனுடைய வலிய அரண்களைத் ய அழித்தனனென்றும். இன்னும் இங்ஙனமே பலவாற்றான் அவர்களைப் போரில் வென்றனனென்றும் ஆரியர் தம்முடைய வேண்டு கோளுரைகளிற் றமிழர்களைத் தாம் போரில் வென்ற குறிப்புத் தோன்றக் கூறுதல் என்னை? எனிற், கூறுதும்: ஆரியர் உண்மையாகவே தமிழரைப் போரில் வென்றனராயின், தாம் அடைந்த அவ் வெற்றித் திறத்தைத் தம் மேல் வைத்துக் கூறாதிரார். மற்றுத், தாம் அவரை வேறல் கூட ாமையால், தாம் வணங்கிய இந்திரனே அவரை யழித்தானென அவன்மேல் வைத்து அவரை வென்றாற்போற் கூறினர். வலியான் ஒருவனை வெல்லமாட்டாமல் அவனால் தோல்வியுற்றவர், தாம் வணங்குந் தெய்வத்தின் முன்னே சென்று மண்ணை வாரியிறைத்து ‘அவனை அழித்துவிடு' என்றோ ‘அவனை அவன் குடியோடு அழியச் செய்தனை என்றோ வைதுரைத்தல் இஞ்ஞான்றுங் கீழ்மக்கள்பாற் காணப்படுகின்றதன்றோ? இதுபோலவே வலியிலரான பழைய ஆரியருந் ‘தமிழரை அழிக்க' என்றோ; 'அழித்தாய்' என்றோ இந்திரனைநோக்கித் தம்முடைய வேண்டுகோண்மொழிகளில் வயிறெரிந்து வைதுரைத்தாரென்பது. ஆரிய மொழியையும் ஆரிய நடையையும் பின்பற்றித் தம்மை ஆரியரென உயர்த்திச் சொல்லிக் கொள்ளும் இஞ்ஞான்றை மாந்தர் பலரைப் போற், பண்டிருந்த ஆரிய மாந்தருந், தம்மவரல்லாத பிறர் நன்கு வாழ்தலைக் கண்டு மனம் பொறாது வயிறெரியும் வன்மைய ரென்பது அவர் பாடிய இருக்குவேதப் பதிகங்களினாலேயே நன்கறியக் கிடக்கின்றது. ஆரியர்கள் இந்திரனைநோக்கிப் பாடிய இருக்குவேத முதன் மண்டில 106 ஆம் பதிகத்தில்,

66

செல்வ

சல்

தய்வங்கள் இந்தத் தாசனது சீற்றத்தைத் தணிப்பனவாக! எங்களினத்தவரைச் வாழ்க்கைக்குச் செலுத்துவனவாக!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/145&oldid=1579770" இலிருந்து மீள்விக்கப்பட்டது