உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

127

ச் செய்யுளின் ஒவ்வோரடியிலும் முதலிரு சீரின் கண்நின்ற சொற்கள் முதற்சீர் முதலெழுத்தொழிய ஏனையெழுத்தெல்லாம் ஒரே யுருவினவாயிருத்தல் காண்க. அங்ஙனம் அவை ஒரே யுருவினவாய் இருந்தாலும். பொருளுரைக்கப் படுங்கால் அவை வெவ்வேறு சொற்களாகப் பிரிந்து வெவ்வேறு பொருள்களைத் தரல்வேண்டுமென்பது இன்னோரன்ன அந்தாதி நூல்களுக்குப் பிற்காலத்தார் சொல்லும் இலக்கணமாகும். அதற்கியையவே இச் செய்யுளின் முதலிருசீர்க்கண் நிற்குஞ் சொற்கள் வேறு வேறாகப் பிரிந்து வேறு வேறு பொருடரல் காண்மின்கள்! முதலடியின் முதலிருசீர்ச்சொற்கள் ‘ஒழியாத’ ‘கவலை’ எனப் பிரிந்து ‘நீங்காத மனக்கவற்சி' எனப் பொருள்படுகின்றன! இரண்டாமடியின் முதலிருசீர்ச்சொற்கள் ‘வழி’, ‘யாக்கு’ ‘அ’ 'வலை' எனப் பிரிந்து 'வழியிலே கட்டிவைக்கும் அந்தவலை' எனப் பொருள் தருகின்றன; மூன்றாமடியின் முதலிருசீர்ச் சொற்கள் ‘பழி' ‘ஆக்க' ‘வல்லை' எனப் பிரிந்து ‘பழியை உண்டாக்கவல்லை' எனப்பொருள் பயக்கின்றன! இவற்றுள் ‘வல்லை’ என்னுஞ் சொல்லின் நடுநின்ற லகர ஒற்றுக் கெட்டு ‘வலை' என நின்றதாக அதனை வைத்தல் வேண்டும்; நான்காம் அடியின் யின் முதல்நின்ற சொற்கள் ‘விழி’ ‘ஆக்க’ ‘அலை' எனப் பிரிந்து முன்னும் பின்னுமுள்ள 'வேல்' 'மகள்' என்னுஞ் சொற்களோடு இயைந்து 'வேலையொத்த விழியினளாய்ச் செல்வத்தைத் தரும் அலைமகள்' எனப்பொருள் தருகின்றன; ஈண்டுச் செல்வம் எனப்பொருள்படும் ‘ஆக்கம்' என்னுஞ்சொல் ஈறுகெட்டு ‘ஆக்க' என நின்றதெனக் கொள்ளல்வேண்டும்; அலைமகள்' என்றது கடலரசன் புதல்வியாகிய உமைப் பிராட்டியாரை. இவ்வாறு முதலிரு சீர்ச்சொற்கள் வேறு வேறாகப் பிரிந்து வேறு வேறு பொருள்களைத் தருமாறு இயற்றப்பட்ட இச் செய்யுளின் பொழிப்புரை இது:

‘நீங்காத மனக்கவற்சி நீங்குவது எந்நாளிலோ சொல்; தான் உலவித்திரிகின்ற கானகத்தின் வழியிலே வேட்டுவர் கட்டிவைத்த வலையினிடத்தே அகப்பட்டுக் கொண்ட ஒரு மானைப்போல் உணர்வு திரிபுற்று நின்று, என்னைப் பழிக்கு உள்ளாக்கவல்லை என் மனமே! உள்ளம் விரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/152&oldid=1579777" இலிருந்து மீள்விக்கப்பட்டது