உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் 10

வழுத்துகின்றிலை, வேலை யொத்த விழியினளாய்ச் சல்வத்தைத் தரும் அலைமகளாகிய உமைப் பிராட்டியார்க்குக்

கணவனாகிய சிவபிரான்

தங்கியிருக்கும் பழமலையை.'

மனமே! அலைமகளிரை தாழ் பழவெற்பினைப் பரவிலை; (அதனால்) ஒழியாக்கவலை யொழிவதென்றோ சொல்! வலையிடைப்படு மானின் மயங்கிநின்று பழியாக்கவல்லை என வினைமுடிவு செய்க.

உணர

இச் செய்யுளைச் சொன்ன அளவிலே சிறந்த தமிழறிவுடை யாரும் இதன் பொருளை உடனே அறியாது திகைத்துப், பின்னர்த் தமதறிவை அதன்கண் உய்த்து, ஒவ்வோரடியின் முதலிருசீர்ச்சொற்களையும் பலவகையாலெல்லாம் பிரித்துப் பிரித்துப் பார்த்து, அதன்பின் இதன் பொருள்களை ப வல்லராவர். இதனை முதற்கட் பயில்வார் இதன் சொற்களை அங்ஙனம் பலவகையாற் பிரித்து வருந்திப் பின்னர் இதன் பொ பாருளை ருளை அறிதல் போலவே இச் செய்யுளை அமைக்கப் புகுந்த புலவரும் முதலிற் றாங் கருதிய பொருளைத் தாங் கருதியவாறே அமைக்க இயலாதவராய், முதலிரு சீர்ச்சொற்கள் பலவகையிற் பிரிந்து பலவாறு பொருடருமாறு பலவகையால் வருந்தியமைத்து, அங்ஙனம் அமைத்த சொற்பொருள்கட் கேற்ப ஏனைச் சொற்பொருள்களைத் தொடுத்து இச் செய்யுளை மிகவருந்தி யமைத்தாராவர். இங்ஙனமெல்லாம் வருந்தியமைத்தும், இச் செய்யுளும் இதன்பொருளும் இறைவன் மேலனவாயிருந்தும், இவை இதனை ஓதுவாருள்ளத்தை உருக்கவல்லனவாயில்லை. மற்று, இங்ஙனமெல்லாஞ் சொற்படுகரிற் கிடந்து அலக்கண் உறாது, இறைவன்பால் நெஞ்சம் நெக்குருகி மாணிக்கவாசகப் பெருமான் தாம் கருதிய பொருள்வழியே கரைந்துரைத்த தாகிய,

66

“அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகே அன்னார், மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே யுன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே பழுதே பிறந்தேன், என்கொண் டுன்னைப் பணிகேனே

என்னுந் திருவாசகச் செய்யுளை மேற்காட்டிய பழமலையந்தாதிச் செய்யுளோடு ஒருங்குவைத்து ஒப்பிட்டுப் பார்மின்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/153&oldid=1579778" இலிருந்து மீள்விக்கப்பட்டது