உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

129

பழமலையந்தாதிச் செய்யுள், தன்னை ஒதுவார் எத்துணைத் தமிழறிவிற் சிறந்தாராயிருப்பினும் அவர்க்குத் தன் பொருளை எளிதிற் காட்டமாட்டாதாய்க் கருதி நிற்பப், பிற்காட்டிய திருவாசகச் செய்யுளோ, தன்னை யோதுவார் தமிழறிவிற் சிறவாராயிருப்பினும் அவர்க்குத் தன் பொருளைத் தன்னை அவரோதும் அப்பொழுதே தெளிபளிங்கின் றெண்ணீரெனத் தெளியக்காட்டி அவரது நெஞ்சத்தை நீராய் நெகிழ்த்தி ஒளிர்ந்து நிற்றல் காண்க. மேற்றந்த பழமலையந்தாதிச் செய்யுட் சொற்களைப் பிரித்துப் பொருள் விளக்கியவாறுபோல் அத் திருவாசகச் செய்யுளைச் சொற்பிரித்துப் பொருள் விளக்க வேண்டிய இடர்ப்பாடில்லாமையும் அறிந்து கொண்மின்கள்! திருவாசகத்தைப் போலவே, பண்டைச் செந்தமிழச் சான்றோர் இயற்றிய நூற்பாக்களும், இடைக்காலத்துப் பெரியார் இயற்றிய நூற்பாக்களும் பெரும்பாலும் இடர்ப்பாடின்றிப்பொருள் சென்ற வழியே சொற்சென்று தம்மை யோதுவார்க்கும் பயிலவார்க்கும் அறிவும் இன்பமுமாகிய பெரும்பயன்றந்து பிறங்குவனவாகப், பிற்காலத்துப்புலவர்கள் இயற்றிய நூற்பாக்களோ சொற் செருகப்பட்ட புழைவழியே பொருள் துறுத்தப்பட்டுத் தம்மை யோதுவார்க்கும் பயில்வார்க்கும் பொருட்பயன்றருவன வல்லவாய் இருண்டுகிடத்தல் பகுத்தறிந்து கொள்ளற்பாற்று. வெறுஞ் சொன்மயக்குடைய செய்யுட்கள் இத்தகையன சில பெரும் பொருட்டொடர் நிலைகளில்(காவியங்களில்) ஆங்காங்கு அருகிவருமாயின் அதனைக் குற்றமாகக் கருதுதல் ஆகாது. ஆனால், இஞ்ஞான்றைப் புலவர்கள் இயற்றிய நூல்கள் பெரும் பாலும் இத்தகைய சொற்றொடர் நிலைகளான அந்தாதிகள், கலம்பகங்கள், உலாக்கள், கோவைகள் முதலியனவாகவே காணப்படுகின்றன. இவை தம்மைப் பயிறலாற் பெரும்பயன் விளையாமை இவை தம்மை நுண்ணறிவினாற் சிறிது பயின்று பார்ப்பினும் நன்கு விளங்கும். இத்தன்மையாவன பயனில் நூல்கள், பண்டைச் செந்தமிழ்க்காலத்திலும் இடைக் காலத்திலும் அருகியல்லது இயற்றப்படாமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று.

1

L

இனிப், பொருள்வகையாலும் பிற்காலத் தமிழ்ப் புலவர் தமிழுக் கிழைத்த தீங்கு பெரிதென்பது காட்டுவாம். முற்காலத்துப் புலவர்கள் இயற்கைத் தோற்றங்களையேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/154&oldid=1579779" இலிருந்து மீள்விக்கப்பட்டது