உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் 10

போய்விளை யாடல்என் றாள்அன்னை; அம்பலத் தான்புரத்தில் தீவிளை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே”

என்னும் இச் செய்யுள், ஒரு மலைநாட்டுத் தலைவி தன் மகளுக்கும் பிறனொருவனுக்கும் இடையே மறைவில் நிகழ்ந்து வருங் காதலொழுக்கத்தினைத் தன் மகடன் வடிவ வேறுபாடு களை உற்றுநோக்கு முகத்தால் உய்த்தறிந்து, இனி நீ அம்பலத்தான் மலைக்கண்ணே சென்று விளையாடல் வேண்டாம்' எனக் கூறி அவளைத் தடைசெய்துவிட்டாள் என்னுஞ் செய்தியை அப் பெண்ணின் தோழி அவடன் காதலனுக்கு அறிவித்து, அவன் அவளைக் காலந்தாழாதே மணஞ்செய்து கொள்ளல் வேண்டுமென அவனுக்குக் குறிப்பாக உணர்த்தும் முறையில் இயற்றப்பட்டிருக்கின்றது. இதன்கட் டோழி தலைவனை முதலில் முன்னிலைப் படுத்துகின்றுழி, அவனும் ஒரு மலை நாட்டுக்குத் தலைவன் என்பது புலப்பட அவனை 'வெற்பா' என்றழைக்கின்றாள்; அங்ஙனம் அழைக்கும்வழி, அவனது மலைக்கண்ணே தேனீக்கள் மேலெழுந்து சுற்றிச்சுற்றிப் பறத்தலைக் கண்டு, அதன்கண் அத் தேனீக்கள் கட்டிய தேனடை தேன் நிரம்பிவிட்டதனையுணர்ந்து செங்குத்தான அம் மலைமுகட்டின் ஒரு புறத்தே தொங்கும் அத் தேனடை யினை எடுக்கல் வேண்டித் தன் சுற்றத்தாரான வேட்டுவர் கண்ணேணியினைச் செய்கின்றனர் என நுவல்கின்றாள். மால்பு என்பது கண்ணேணி; அஃதாவது நீண்ட ஒரு பச்சைமூங்கிலை யெடுத்து, அதன் கணுக்களின் நெடுகஉள்ள கிளைகளை ஒரு சாண்விட்டு நறுக்கி அமைப்பது: இங்ஙனம் அமைத்த அம் மூங்கிற் கோலைச் செங்குத்தான ஒரு மலையின் புறத்தே சார்த்திவிட்டால், அதன் கணுக்கள் நெடுக ஒருசாண் நறுக்கி விடப்பட்ட கிளைகளிற் காலை வைத்து வைத்தேறி எவ்வளவு உயரமான இடத்தின் உச்சிக்கும் வேட்டுவர் ஏறிவிடுவர். இங்கே அத் தலைமகனது தலையினுச்சியின் உள்ள தேனடையில் தேன் நிரம்பிவிட்டதனை, அத் தேனடையின் மேலெழுந்து சுழன்று பறக்குந் தேனீக்களின் இயக்கத்தாற் கண்டுணர்ந்து தன் உறவினரான வேட்டுவர் அதன் தேனை யெடுக்கக் கண்ணேணி அமைக்கின்றரெனத் தோழி கூறிய உரையினுள்ளே, ‘நினக்கும் நின் காதலிக்கும் இடை நிகழும் இக் காதலொழுக்கத்தினை எம் வேட்டுவச் சுற்றஞ் சில குறிப்பான் அறிந்து நின் காதலியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/157&oldid=1579782" இலிருந்து மீள்விக்கப்பட்டது