உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

131

ங்ஙனம் அறிவிக்குங்கால், தமது இல்லம் பெரியதொரு மாளிகையாயிருந்துந் தாழ்மைதோன்ற அதனைச் சிறிய இல் என்கின்றார்; உண்மையிலே அஃதொரு சிறுகுடிலாயிருந்தால் அதன்கண் அழகிய தூண்கள் நிறுத்தப்பட்டிருத்தல் ஆகாமை யால், அம்மையாரது இல்லம் பெரியதொன்றேயாதல் திண்ணம். வந்த அம்மாது தம் மகன் எங்கே உளன் என வினாயதற்கு, அவனிருக்குமிடந் தமக்கு உறுதியாய்த் தெரியாதேனும், அவன் போர்க்களத்திலேதான் இருக்கற்பாலன் என ஒரு குத்துமதிப்பாய் மறுமொழி தருகின்றார். இவ்வாறு மறுமொழி தருகின்றுழி, அப் புதல்வனை ஈன்ற தம் வயிற்றைச் சுட்டிக்காட்டி, அதற்கு, ஒரு புலிகிடந்து துஞ்சிப்போகிய மலைமுழைஞ்சினை உவமை சொல்லுகின்றார். இவ்வாறு அவர் சொல்லிய இச் செய்யுளில், அழகிய தூண்கள் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு சிறந்த இல்லத்தின் உருவமும், அதனுள் தம்மைக் காணவந்த ஒருமாது அத் தூண்களில் ஒன்றை ஒரு கையாற் பற்றிக் கொண்டு தம் மகனைக் குறித்து வினவிய நிலையுந், தம் மகன் போராண்மையிற் சிறந்து தம்மைப் பிரிந்துபோய்ப் போர்க்களத்தில் மறஞ் சிறந்து நிற்குந் தோற்றமும், அவனை ஈன்ற தம் வயிற்றுக்கு உவமையாகக் காட்டிய புலிகிடந்து துஞ்சிப்போன மலைமுழைஞ்சின் தனித்தோற்றமும், ஓவியத்தில் வரைந்துகாட்டினாலென நமதுளக்கண்ணெதிரே விளக்கமாய்த் தோன்றி நம்மை இன்புறுத்துதல் நோக்கு மின்கள்! இங்ஙனஞ் சில சொல்லிற் பலபொருட்டோற்றமும் உலக இயற்கை மக்களியற்கையில் உள்ளவாறே எழில் கெழும எழுதிக்காட்டும் பேரறிவாற்றல் பண்டை நல்லிசைப் புலவரெல்லார் மாட்டும் வீறி விளங்காநிற்கின்றது.

இனிப், பண்டைச் செந்தமிழ்ப் புலவரேயன்றி, இடைக் காலத்து வந்த தமிழ்ச்சான்றோரும் உலக இயற்கை மக்களியற்கையை அவையிற்றின் உண்மைக்கு மாறாகாமலே ஓவியத்தில் வரைந்து காட்டுவதுபோற் காட்டி அரும்பெருஞ் செய்யுட்கள் இயற்றிவந்தனர். இதற்கு, மணிமொழிப் பெருமான் அருளிச் செய்த திருச்சிற்றம்பலக் கோவையார் என்னுந் தமிழ்த்தேன் நிறைந்த பொலன் குடத்திருந்து ஒரு நறுந் திவலையினை எடுத்து ஈண்டு நுஞ்செவிவாய்ப் பெய்குதும்:

“ஈவிளை யாட நறவினை வோர்ந்தெமர் மால்பியற்றும்

வேய்விளை யாடுவெற்பா! உற்று நோக்கிஎம் மெல்லியலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/156&oldid=1579781" இலிருந்து மீள்விக்கப்பட்டது