உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் 10

L

பிறழக்கொண்டு ‘பாரதம்,’ சூளாமணி,' 'கொங்குவேள் மாக்கதை,’ ‘குண்டலகேசி’ ‘வளையாபதி’ ‘சீவகசிந்தாமணி' 'இராமாயணம்' முதலான பொய்ந்நூல்களை ஆக்கினாராயினும், மெய்கூறுதலிலேயே மெய்யுணர்தலிலேயே பழகிப்போந்த பழைய தமிழ்மக்கள் உள்ளத்திற்கு அவை இன்பம் பயவாமையின், அவை பெரும்பாலும் வழங்காதேபோயின; அன்றி ஆரியர் வயமான பேதைமாக்கள் குழுவிலே அருகி வழங்கின. இதனாலன்றோ திருவள்ளுவர் காலத்தை யடுத்துத் தோன்றிய பெருந்தேவனார்' என்னுந் தமிழ்ப்புலவர் வடமொழி யிலிருந்து பாரதக் கதையைத் தமிழிலே மொழிபெயர்த் தியற்றியும், அந் நூல் இங்கு வழங்காமலே அழிந்துபோயிற்று. இப்பாரதக் கதையினும் பொய்ம்மை நிறைந்ததாயிருத்தல் பற்றி வடமொழியிலுள்ள இராமாயண கதையைப் பண்டையாசிரியர், இடைக்காலத்தாசிரியர் எவருந் தமிழில் மொழி பெயர்த்துச் செய்திலர். இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கம்பரென்னும் புலவராற் பாடப் பட்ட இராமாயணம், வடமொழியிலுள்ள வான்மீகி ராமாயணத்தைப் பார்த்துச் செய்யப்பட்டதாயினும், அதனினும் பார்க்கப் பொய்ம்மை நிறைந்ததாய்ப், பழைய தமிழாசிரியர் கைக்கொண்ட இயற்கை வழக்கொடு மாறுபட்டதாய்த் தோன்றினமையின்; அக் கம்பர்க்குப் பிற்பட்டிருந்த சிறந்த உரையாசிரியர்களாலும் அஃது ஏற்றுக்கொள்ளப் படாததாயிற்று. இங்ஙனமாக வ் விடைக் காலத்து நடுவிலும் இதன் இறுதியிலும் இருந்த தமிழ்ப் புலவர் சிலரால் வடமொழிப் பொய்வழக்குத் தழீஇ ஒரோ வொருகால் இயற்றப்பட்ட சூளாமணி, சிந்தாமணி முதலான பொருட்டொடர் நிலைகள் பெரும்பாலும் பொய்க்கதைகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டமையாற்றான், பண்டைத் தமிழாசிரியர் சென்ற மெய்ந்நெறியே செல்லுங் கடப்பாடுடையரான ஆசிரியர் சேக்கிழார் உண்மை நாயன்மாரின் அரிய அருள் வாழ்க்கை வரலாற்றுண்மைகளைப் பலவாற்றானுந் துருவி யாராய்ந்து திருத்தொண்டர்புராணம் என்னும் பெரியபுராணம் என்றும் வழங்குஞ் செந்தமிழ்ச் செம்பொருட்டொடர் நிலையினை இயற்றியருளினார். இடைக்காலத் துவக்கத்திலெழுந்த 'சிலப்பதிகாரம், 'மணிமேகலை' தவிர ஏனைப் பொருட்டொடர் நிலைகளுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/159&oldid=1579784" இலிருந்து மீள்விக்கப்பட்டது