உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் 10

ராயினர். ஆரியமக்கள் தாஞ்சார்ந்து நின்ற தமிழவரசர்கள் பலர்க்கும் அவ்வேள்விச் சிறப்பினை உணர்த்தி அவரும் அது செய்யுமாறு வலியுறுத்துதற்குப் புகுந்தனர். புகுத, ஒரு சிலர் அதற்கு ஒருப்பட்டார்; ஒரு சிலர் அது செய்தற்கு உடன்படாராயினர். விதேகர்கட்கு வேந்தனான சனகன் என்னும் அரசன் அவைக்களத்தில் ஆரியக் குருக்கண்மார் பலர் இடம்பெற்றனர். அவருள் மிகச்சிறந்த யாஞ்ஞவற்கியர் என்னும்

ஆரிய குரு, அவ்வேந்தன் உதவியால் வடமொழிப்

பயிற்சியினைப் பெருகச் செய்து எசுர் வேதத்தினைப் பாகுபாடு செய்து ஒழுங்குபடுத்தினார்; அவராற் பாகுபடுத்தப்பட்ட எசுர்வேதபாகம் இக்காலத்துச் சுக்கில எசுர்வேத மென்று பெயர் பெறுகின்றது. இவ்வெசுர்வேத பிராமணத்திற்கு விரிந்த ஓர் உரையும் இவரால் இயற்றியிடப்பட்டது.

“ஆரிய முனிவர்க்குத் தமிழ் மன்னர்

மெய்ப்பொருள் தேற்றினமை

இங்ஙனஞ் சிறந்த இவ்யாஞ்ஞவற்கிய முனிவரை யுள்ளிட்டு ஆரியக்குருக்கண்மார் மூவர். இச்சனக வேந்தன் வினாவிய தத்துவப் பொருள்களை அறிய மாட்டாராய்த் தலைதாழ்க்கப் பட்டுப்போக, யாஞ்ஞவற்கியர் மட்டும் பின்னும் அப்பொருள் நுட்பந்தேரும் வேட்கை பெரிதுமுடையராய் சனகனுக்குக் குற்றவேல் புரிந்து, அவன் தேரிற் செல்கையில் அவனுடன் சென்று அதனால் அவ்விரகசியப் பொருள் அறிவுறுக்கப்பட்டுத் தெளிந்தாரென்பதும், 'காசிக் குடிகட்கு றைமகனான அசாதசத்துரு என்பவனொடு பாலாகி என்னும் ஆரியக்குரு ஒருவர் செருக்குற்றுச் சென்று வழக்காடி அவன் வினாவியவற்றிற்கு இறை தரமாட்டாராய் வாளாதிருப்ப அவன் அவரை நோக்கி, “ஓ பாலாகி, இவ்வளவுதான் நீர் அறிவீர்!” என, அக்குருவும், "ஓம் அவ்வளவுதான்” என, அவ்வரசன். “ஓ பாலாகி, இவை எல்லாச் சடங்கிற்கும் முதல்வனாய் எல்லா வற்றையும் படைக்க வல்லனான இறைவன் ஒருவனே அறிந்து வழிபடற்பாலன்" என்றவர்க்கு உணர்வு கொளுத்தினா னென்பதும், 2சுவேதகேது வென்னும் மற்றும் ஓர் ஆரியக்குரு பாஞ்சாலர் கூடிய பேரவையிற்சென்று, அங்குச் சைவலி என்னும் ஒருவனோடு வழக்கிட்டுத் தோல்வியடைந்து வருந்தியவுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/181&oldid=1579806" இலிருந்து மீள்விக்கப்பட்டது