உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

155

பண்ணிற் பதின்மூன்றுமுதற் பதினைந்து வரையிலுள்ள பாட்டுக்களான,

"விரைந்து

செல்கின்ற கரிய மறவன் அஞ்சுமதி யாற்றங்கரையில் பதினாயிரம் படைகளுடன் இருந்தான். இந்திரன், உரத்து ஊளையிடுகின்ற இத்தலைவன் இருப்பை அறிந்து, ஆரியமக்களின் நன்மைக்காக அக்கொள்ளைக் கூட்டத்தாரை அழித்தனன்.

66

'மாசியிற் பகலவன் மறைந்திருத்தல்போல அஞ்சுமதி யாற்றங்கரைப் பக்கங்களில் அக்கரிய மறவன் ஒளிந்திருத் தலைக் கண்டேன். ஓ மருத்துக்களே! நீங்கள் அவனுடன் மலைந்து அவனை அழிக்கும்படி விரும்புகின்றேன்” என்று இந்திரன் கூறினான்.

66

ன்

அக்கரியமறவன் பிறகு அவ்வஞ்சுமதி யாற்றங்கரையில் ளங்கித் தோன்றினான். இந்திரன் பிருகற்பதியைத் தன் னுப ன் கூட்டிக் கொண்டுபோய் இரக்கமில்லாத அப் படையை அழித்தனன்.” என்பவற்றானும் நன்கு அறியலாம். ஆரியர் இங்ஙனந் தமிழரொடு மலைவு கொண்டிருக்கையில் தமக்கு வலிவு ஏறுதற் பொருட்டும், தமக்குத் துணைசெய்யும் இந்திரன், மருத்துக்கள் முதலான தேவர்க்கு உரம் பெருகுதற் பொருட்டும் சோமச்சாற்றையும் நெய்யையுஞ் சொரிந்து அளவிறந்த விலங்குகளைக் கொன்று வேள்விகள் வேட்டு வந்தனர். இவைகளைச் சீர்பெற நடத்துதலிலும், இவற்றிற்கு வேண்டும் பெரும் பொருளைத் திரட்டுவதிலும் மிக முயன் றனர். இவ்வாறு வேள்விச் சடங்குகட்கு முதன்மைதந்து ஆரியர் ஒழுகிய நாட்களில் மெய்ப் பொருட்டன்மை காட்டும் நூல் ஒன்றேனும் அவர்களால் வரையப்படவில்லை. இங்ஙனம் அவர் மிக முயன்று செய்யும் வேள்விச்சடங்கிற்கு ஒரு சிறிதும் ஒருப்படாத தமிழ் மக்கள் தம் வழியே மெய்ப்பொரு ளாராய்ச்சியிற் றலைப்பட்டு விளங்கினர். வடநாட்டிற் செங்கோலோச்சிய தமிழ அரசர்கள் ஆரிய மக்கள் மாட்டு மாறுபடுதல் இலராயினும், அவர் செய்யுங் கருமச் சடங்கிற்கு ஒருவகையால் இணங்கிப் பெரும்பாலுந் தமக்குரிய மெய்ப்பொருளாராய்ச்சியிலேயே நிலைபெற்று நின்றனர். ஆரியரோ வேள்விகளின் உயர்வும் அவற்றை வேட்கு முறைகள் பலவும் மிக விரித்து ஆய்ந்து பிராமணங்கள் எழுதுவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/180&oldid=1579805" இலிருந்து மீள்விக்கப்பட்டது