உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

2. திருக்குறள் தோன்றிய காலநிலை

ஆரியர் வரவும் வாழ்க்கையும்

இனி, இங்ஙனஞ் சொல்லும் பொருளுஞ் செறிந்து ஆழ்ந்த திருக்குறள் யாப்பிற்கும், அஃது எழுந்த கால நிகழ்ச்சிக்கும் நிரம்ப ஒற்றுமை யுண்டென்பதூஉம் காட்டுவாம். வடக்கே ஆசியாக் கண்டத்தின் இடையிலிருந்து தமிழ்நாடெனப்படும் இவ்விந்திய தேயத்துட்புகுந்த ஆரியர் தமிழருடன் ஒற்றுமையாய் வாழத் தொடங்கிய காலம் கிறித்து பிறப்பதற்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயாம். அவ்வோராயிர ஆண்டுகட்கு நெடுநாள் முன் ஆரியர் நாகரிகமில்லாத நிலையிலிருந்தனர். சிந்துநதி ஓடும் தேயங்களில் அவ்வாரியர் தம் நிலைக்கு ஒவ்வாத் தமிழரொடு மலைந்து மாறுபட்டு நின்றுழி, உலக இயற்கையிற் றோன்றுந் தோற்றங்களை மருண்டு வணங்கித் தம்மோடு எதிரிய தமிழரை அழிக்கும்படி வேண்டினர். இதனை இருக்கு வேதத்தின் இரண்டாம் மண்டிலத்து இருபதாவது பண்ணிற் போந்த ஆறாவது ஏழாவது

பாட்டுக்களான,

66

'அரிய காரியங்களை முடிப்பவனும் மிகப் புகழ் பெற்ற கடவுளுமான இந்திரன் ஆரிய மகனை உயர்த்துகின்றான். வலிமையும் ஆற்றலும் வெற்றியும் உடையோனாய் அவன் அருவருக்கப்படுந் தாசனைத் தலைகவிழச் செய்கின்றான்.

66

.

விருத்திரனைக் கொன்றவனும் நகரங்களை யழிப் பவனுமான இந்திரன் அறிவில்லா மக்களான தாசருடைய படைகளைச் சின்ன பின்னமாக்குகின்றான். அவன், ஆரிய மகனுக்கு என்று நீரையும் நிலத்தையும் படைத்து, வேள்வி செய்வோர் விரும்பியவற்றைத் தருகின்றான் என்பவற் றானும், ஏழாவது மண்டிலத்துத் தொண்ணூற்றாறாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/179&oldid=1579804" இலிருந்து மீள்விக்கப்பட்டது