உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

153

பெரிதாதலுடன் அமைத்தற்கும் அருமையுடைத்தாம். இனி, அப்பொன்வள்ளத்தில் நிறைத்த பனிநீர் நெகிழ்ந்த வுருவின் விரைந்தழியும் மணமுடைமை போல், நாலடியாரிற் செய்யுட்பொருளுங் கேட்கும் பருப்பொருளறிவினார்க்குச் சில

கணங்கண்

மாத்திரையே மகிழ்ச்சி பயந்து பின் அவ ருள்ளத்தே நிலைபேறின்றி ஒழியும்; மாணிக்கச் செப்பினுட் செறித்துவைத்த நானங் கட்டுருவினால் நிலை பெறக் கமழும் நறுமண முடைமைபோலத் திருக்குறட்பொருளுங் கேட்கும் நுண்ணுணர்வினார்க்கு நினைத்தொறும் உரைத்தொறும் மகிழ்ச்சி பயந்து அவருள்ளத்தே ஆழ்ந்து நிலைபெறுவதா மன்க. இதனால், நாலடியார் முதலான நூல் யாப்புகள் பொதுவறிவினார்க்கு அறிவுறுத்தும் பொருட்டுப் புனைந் துரை வகையாற் சொற்பொருள் நெகிழ்ந்து ஒழுகும் முறை பற்றிச் செய்யப்பட்டனவாமென்பதூஉம், திருக்குறள் யாப்பு நுண்ணுணர்வினார் பொருட்டுச் சொற்சுருக்கமும் பொருட் செறிவும் பொதுள இறுகிய நுண்நிலையால் அமைக்கப் படும் நெறிதழுவி வந்த தாமென்பதூஉம் நன்கறியப்படும் என்க. மக்களுயிர்க் குறுதிப்பொருள் விளக்குதலே உள்ளுறையாக் கொண்டு எழுந்த காப்பிய நூல்கள் புனைந்துரை வகைபற்றி வந்தனவே யாமென்க. அற்றேற், காப்பிய நூல்களுஞ் சொற் செறிவு பொருட்செறிவு நன்கமைந்து விளங்கக் காண்டு மாகலின், அவையெல்லாம் நெகிழ்ந்தொழுகும் புனைந்துரை நெறிபற்றி வந்தனவென் றுரைத்தல் பொருந்தாதாம் பிறவெனின்;- நன்று கூறினாய், அக்காப்பிய நூல்கள் தம்மிற்றாழ்ந் தவற்றை நோக்கச் சொற்செறிவு பொருட்செறிவு உடையவெனப்படுமல்லது தம்மின் மிகவுயர்ந்த இத்தெய்வத் திருக்குறள் நூலை நோக்க நெகிழ்ந்த நிலையினவேயாம் என்க.

1.

2.

3.

4.

அடிக்குறிப்புகள்

தொல்காப்பியம், செய்யுளியல், 159-வது சூத்திரம், பேராசிரியர் உரை, திருக்குறள். 79-2

"

தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம், 11-வது சூத்திரவுரை. நாலடியார், தீவினையச்சம், 5-வது செய்யுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/178&oldid=1579803" இலிருந்து மீள்விக்கப்பட்டது