உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் - 10

நின்று மற்றொன்றனை வருவிப்பதன்றி அஃதின்றியே அவை வருவிக்கப்படுமென்றால் பொருந்தாக்கூற்றாம். அற்றன்று.'பிறை’ ‘மதி' என்பவற்றால் அவை உய்த்துணரப்படுதல் ஒருதலை யாகலின் அச்சொல் நின்று பயமின்றேயெனின்;- முழுவதும் வருவிக்கற்பாலதனை உய்த்துக்கொண்டுணர்தல் ஒரு சொல் இல்வழியேயன்றி உள்வழிப் பொருந்தாதெனச் 3சேனாவரை யருமுரைத் தாராகலின், அங்ஙனங் கடாவுதல் இசையாதென விடுக்க. இனி, அச்செய்யுட் பொருளையே விளக்க நாலடியாரில், “4பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்-வரிசையால்

வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே தானே சிறியார் தொடர்பு.”

என்றொரு செய்யுள் வருகின்றது. இச்செய்யுட்கண் பெரியவர் கேண்மை என்பது மேலைத்திருக்குறளில் ‘நீரவர் கேண்மை’ என்பதிலும், ‘பிறை போல நாளும் வரிசை வரிசையா நந்தும்’ என்பது 'பிறைநிறை நீர’ என்பதிலும், 'சிறியார் தொடர்பு’ என்பது ‘பேதையார் நட்பு' என்பதிலும், 'வரிசையால் வானூர் மதியம் போல் வைகலுந் தேயுமே' என்பது ‘மதிப்பின் நீர’ என்பதிலும் அடங்குதல் காண்க. இச்செய்யுளிற், போல, வைகலும், தேயுமே, தானே முதலிய சொற்கள் வேண்டா கூறலாய் நிற்றல் காண்க. அற்றேல், இச்செய்யுள் குற்றம் படுமோவெனின்;- படாது.என்னை? அச்சொற்களெல்லாம் ஓர் அணியியல் குறித்து மழுங்கிய உணர்வினார்க்கு மகிழ்ச்சி தருமாகலானும், நுணு யறிய வேண்டாது எளிதிலே அவர்க்குப் பொருள் புலப்படுத்த லானுமென்க. 'வானூர் மதியம் என்பது வானூர் மதியம் என்பது 'குழவியூர்தலை’ நினைப்பித்தலின் அஃது ஓரணியியலாயிற்று. இந்நாலடியாரிற் செய்யுள் வாயகன்ற பொன் வள்ளத்தில் நிரப்பிய பனிநீர் போல்வதாம்; மற்று அத்திருக்குறட் பாவோ மாணிக்கச் செப்பினும் பொதிந்திட்ட நானம் போல்வதாம், மாணிக்கச் செப்பு விலையேறப் பெறுதலுடன் செய்தமைத்தற்கும் அருமை யுடைத்தாம்; பொற்கிண்ணம் விலை குறையப் பெறுவதுடன் செய்தமைப்பதற்கும் எளிதின் நெகிழ்தலுடைத்தாம். நாலடி யார் செய்யுளியற்கைக் குணஞ் சிறிதாதலுடன் புலவனாற் பாடுதற்கும் எண்மை யுடைத்தாம்; திருக்குறு வெண்பாட்டோ குணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/177&oldid=1579802" இலிருந்து மீள்விக்கப்பட்டது