உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

151

பெறுதலுடைய மாணாக்கரை நோக்கி எழுந்த தென்றுணர்க. இன்னோர் நல்லறிவிற்குப் பொருந்தச் சுருங்கத் தெரித்தல் வல்ல யாப்புக் குறுவெண்பாட்டையன்றிப் பிறிதொன்று காணப்படாமையின், இதுவே இந்நூலுக்கு இணங்கிய கருவியாயிற்று என்க. மற்றைப் பாவிலும் பாவினங்களிலும் இங்ஙனம் ஓர் உண்மைப் பொருளைச் சொற்சுருங்க ஓதி அவ்வுண்மை மட்டுமே புலப்படுத்தல் ஒருவாற்றானும் முடியாமை காண்க. இது தெரிதற்பொருட்டு இந்நூலின்கண் ஒரு செய்யுளை நாலடியாரிற் செய்யுளொன்றனோடு ஒப்பவைத்து விளக்கிக் காட்டுவாம். அறிவுடையார் நட்பு நாடோறும் பெருகுதலும் அறிவிலார் நட்பு முன்கொண்ட அளவிற் றேய்ந்து அருகுதலும் உணர்த்துதற்கு ஆசிரியர்,

2‘நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு”

(குறள் 782)

என்று கூறியருளினார். இதன் பொருள்: 'நீரவர் கேண்மை பிறை நிறை நீர’ எனவும், “பேதையார் நட்பு மதிப்பின் நீர’ எனவும் பிரித்து இயைத்து, ‘அறிவுடையார் கேண்மை முன்கொண்ட அளவிற்றன்றிப் பிறை நாடோறுங் கலை வளர்தல்போல வளரும் இயற்கைத்தாம்; அறிவில்லார் கேண்மை அவர் அது கொள்ளுங் காலத்துப் பெரிதாய்ப் பின் நாட்களிற் கலைமுற்றியமதியந் தேய்ந்து அறுதல்போலத் தேய்ந்தொழியுந் தன்மைத்தாம்’ என்க. 'பிறை' நேயம் வளர்தலையுணர்த்துதற்கும், ‘மதி' அது தேய்தலையுணர்த்துதற்கும் உவமைகளாய் எழுந்தன. ‘பிறை’ ‘மதி’ என்னுஞ் சொற்களானே ஆசிரியர் கருதிய பொருள் இனிது விளங்குமாகவும், 'நிறை' என்னும் ஒரு சொல் வேண்டா கூறலாமெனின்;- ‘மதி பின் குறை நீர' எனப் பின்னுள்ள சொற் றொடர்ப் பொருள் நிரம்புவதற்கு வருவிக்கப்படுங் குறை என்னுஞ் சொல் அதனாற் பெறப்படுதலானும், உவமைக்கும் பொருளுக்குமுள்ள பொதுத்தன்மையினை விளக்குதற்கு அச்சொல் இன்றியமையாது வேண்டப்படுதலானும் அது வேண்டா கூறலாவது யாங்ஙனமென மறுக்க. ‘நிறை’ என்னும் அச்சொல் இல்வழியும் ‘பிறை’ ‘மதி’ என்பவற்றால் ‘நிறை’ ‘குறை’ என்னுஞ் சொற்கள் உயர்த்துணர்ந்து வருவிக்கப்படுமாகலின், அது வேண்டா ா கூறலேயாம் பிறவெனின்;- அற்றன்று, சொற்றொடர்ப் பொருட்குவேண்டும் யாதானும் ஒரு சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/176&oldid=1579801" இலிருந்து மீள்விக்கப்பட்டது