உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் - 10

ஒருவன் அறிவை மயக்கி அவனைத் தன்வயப்படுத் தலும், ஒருவற்கு ஒரு பொருளின் உண்மைத் தன்மை காட்டி அவனறிவை நன்கு விளக்கி அவனைத் தன்வயப்படுத்தலும் என நூல்களாற் கொள்ளப்படும் முறை இருவகைத்தாம். இதனை ஓர் எடுத்துக்காட்டின்கண் வைத்துக் காட்டுதும். ஒரு பெண், பொற்பூ இடைமிடைந்து பொற்சரிகை விளிம்பு கோத்து மிளிரும் நீலப்பட்டாடை நலம்பெற உடுத்து, நிறந்தெரிந்த முழுமணிகள் அழுத்தி,நறிது முற்றிய நல்லணிகலன் அணிந்து, புழுகு நெய்யும் நானமும் விரைகமழ நறுங்கூந்தலில் உரைத்து, உறுப்புத் திருத்தி ஒய்யாரங்காட்டி உவகை பொருத்தி உரிய அன்பின் சில்லுரை இன்புற மொழிந்து ஓர் ஆண்மகனைத் தன்வயப்படுத்தல் போல்வது முதலில் கூறிய முறை. இரண்டாவது முறையோ அவ்வாறன்றி, இயற்கையழகு வாய்ப்பப் பெற்றாள் ஒரு திருமகள் செயற்கை நலம் பெறாளாய்க் கருகி நீண்ட விரிகுழற் கற்றை யும், சேலெனப் பிறழும் பெருமதர் விழியும், முல்லை மொக்குள் போன்ற மெல்லிய மூக்கும் கொவ்வைப் பழத்தைப் பழித்த செவ்விய இதழும், யானை மருப்பிற்பொலியும் இசைந்த எயிறும், கடைந் துருட்டிய தன்ன பச்சிளந் தோளும் பூங்கொம்பு போல் துவளும் ஒசிவும் உடையவளாய்க், கள்ள நோக்கமின்றி உள்ளஞ் செவ்வியளாய் கிளியென மிழற்றி மயிலென உலவித் தன்மாட்டு முதிர்ந்த அன்புடைய காதலன்பாற் றானும் உள்ளம் உருகி ஒருமித்து அவனைத் தன்பாற்படுத்தல் போல்வதாம். இவ்வாறு இருதிறப்பட்ட நூன்முறைகள் ஓர் உண்மையைப் பலவகையாற் புனைந்து விரித்துரைக்கும் நெறிமழுங்கிய அறிவினார் பொருட்டும் ஓர் பாருட்டும் ஓர் உண்மைப் பொருளைக்

கிடந்தவாறே எடுத்துச் செவ்விதின் விளக்கி அறிவுகொளுத்து நெறிமிக்க நுண்ணுணர்வினார் பொருட்டும் நூல்களான் மேற்கொள்ளப் பட்டன. இவ்விரண்டினுள்ளும் பிற்கூறிய நெறியே சிறப்புடைத்தாதல்

விளங்கும்.

எல்லார்க்குந்தெற்றென

ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் மக்க ளுயிர்க்கு உறுதிப் பொருளாவனவற்றைத் தொகுத்தெடுத்து, மற்று அவை தம்மைப் பலவகையாற் புனைந்து கூறுதற்கு இசையாராய். உண்மைத் தன்மை உள்ளவாறே புலப்படத் தெளித்துக் கூறுகின்றாராகலின், இந்நூல் நுண்ணறிவு விளங்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/175&oldid=1579800" இலிருந்து மீள்விக்கப்பட்டது