உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் 10

6

விசுவாமித்திரர், சனகன் முதலியோரைத் தமிழரெனக் கூறியது ஒரு சிறிதும் பொருந்தாதாம் பிறவெனின், அற்றன்று; ஆரியர் இவ்விந்திய நாட்டிற் புகுதன் முன் ஈண்டுறைந்தார் தமிழரே என்பது வரலாற்றுநூல் வல்லார்க்கெல்லாம் ஒப்ப முடிந்தமையின், வடநாட்டிலிருந்த தமிழர் ஆரியர் வந்தபின் அவரோடொருமித் திருந்தும், அவரொடு மறுதலைப்பட்டு மலைந்தும் உழிதருகையில், அவர் சொல்லைத் தாங்கற்று அவர்க்குடன்படாது மாறாடுவாராயினராகலான் தமிழர்க்கும் வடசொல் உரித்தாயிற்று. இடவேறுபாட்டானுஞ் சொல் வேறுபாட்டானும் ஒரு சாதியாரைப் பிற சாதியாராகக் கருதல் அளவை நூல் வழக்கன்று. வங்காளத்து இந்தியர்கள் பலர் ஆங்கில மொழியினைத் திறம்படக் கற்று ஆங்கிலநாட்டிற் சென்று உறைதல் பற்றி அவரெல்லாம் ஆங்கில சாதியாரென்றே கொள்ளப்படுவரோ? படாரன்றே. “குலவிச்சை கல்லாமற் பாகம் படும்” என்றவாறு, அவரவர் குலத்திற்குரிய குணமும் ஒழுக்கமும் இயற்கையிலே உளவாம். ஆகவே, "நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங், குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்” என்னும் அருட்டிருமொழியின்படி அவரவர்

ஒழுக

லாற்றான் மட்டும் அவரவர் குலவியற்கை அறியற்பால தாகுமென்க. பண்டைக்காலம்தொட்டுத் தமிழ்மக்களியற்றிய நூல்களிலெல்லாம் ஆழ்ந்த மெய்ப்பொருளாராய்ச்சியே காணக்கிடக்கின்றது. தொன்றுதொட்டு ஆரியமக்களியற்றிய நூல்களிலெல்லாம் இயற்கைத்தோற்ற வழிபாடும் வேட்டன்

முதலான படுகின்றன.

கருமங்களியற்றுதலில்

தொல்காப்பியமும் இருக்கு வேதமும்

றைப்புமே

காணப்

இவ்வாறு இவ்விருசாதியார்க்குரிய சிறப்பியல்புகளை அறியல்வேண்டிற் றமிழர்க்குத் தொல்காப்பியமும் ஆரியர்க்கு இருக்கு வேதமுங் கருவியாயிருந்து உதவு கின்றன. தமிழர்க்குத் தொல்காப்பிய மொன்றுமே மிகப் பழைய நூலென்பது, உரையாசிரியர் நச்சினார்க்கினியர், “சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோர் அறிதல் வேண்டி வியாதர் வேதங்களை நான்கு கூறாகப் பகுக்கு முன்னரே தொல்காப்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/183&oldid=1579808" இலிருந்து மீள்விக்கப்பட்டது