உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

995

159

மியற்றப்பட்டது என்று ஓதுமாற்றால் நன்குணரப்படும். இங்ஙனம் மிகப்பழையதான தொல்காப்பிய நூல் எழுத்துச் சொல்லியல்புகளை நன்காராய்ந்துணர்த்தியபின், மக்களுயிர்க் குறுதியென நாடப்படும் எல்லாப் பொருள்களையும் அகம், புறம் எனப் பகுத்து முறைவழாது தெரித்துச் செவ்விதின் விளக்கி, அவ்வாறு விளக்கும் பகுதிக்குப் பொருளியல் என்னும் பெயருங்காட்டித் திகழுகின்றது; அது, மக்கள் மனவறிவு புறத்தே விரிந்து சென்றறியும் பொருட்பகுதியினை இனிது விதக்குமாறு போலவே, அவ்வறிவு அகத்தே குவிந்து ம ங்கி உலகிற்கு முழு முதற்பொருளான இறைவன்பால் ஒருங்குபட்டு நிற்றன்மரபும், அங்ஙனம் ஒருங்குபட்டு நிற்றற்கு நிலைக்களனான அம்முதற்பொருள் “ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங்கடந்த பொருளாங் கந்தழி யினியற்கையுந் தெளிவுபெறக் குறித்து நின்றது. இவ்வாறு நுனித்தறியப்படும் பொருள் மலிந்து பாகுபாடுற்று நடை பெறுந் தொல்காப்பிய முழுமுதனூலோடு ஒத்துப் பார்க்குமிடத்து, ஆரியர்க்கு மிகப்பழையதாயுள்ள இருக்கு வேதம் மிகத் தாழ்ந்த தொன்றேயாதல் நடுநிலையாளர்க் கெல்லாம் நன்கு விளங்கும். இருக்கு வேதத்தில் நிரம்பிய பொருளெல்லாம் ஆரியர் தமக்குரிய ஆடு மாடுகள் பல்கல் வேண்டியும், தாமுறையும் நிலஞ் செழிக்கல் வேண்டியும், தாம் மக்கள் மனைவியரோடு நன்கு வாழல் வேண்டியும், தியூ, வருணன், மித்திரன், இந்திரன் என்பவரைக் குறையிரந்து பாடின பாட்டுக்களும், வேள்விவேட்குமுறைகள் சிலவுமேயாம். இது பத்து மண்டிலங்களுடையது. இவற்றுள் முதன் மண்டிலமும் பத்தாவது மண்டிலமும் இருடிகள் பலராற் செய்யப்பட்ட பாட்டுகள் ஒருங்கு தொகுக்கப்பட்டபகுதிகளாம்.இரண்டாவது மண்டிலம் பிருகு குடியினரைச் சேர்ந்த கிரிச்சமதரால் தொகுக்கப்பட்டது. மூன்றாவது மண்டிலம் விசுவாமித்திரராற் றொகுக்கப்பட்டது. நான்காவது மண்டிலம் வாமதேவராற் றொகுக்கப்பட்டது. ஐந்தாவது மண்டிலம் அத்திரியாற் றொகுக்கப்பட்டது. ஆறாவது மண்டிலம் பாரத்துவாசராற் றொகுக்கப்பட்டது. ஏழாவது மண்டிலம் வசிட்டராற் றொகுக்கப்பட்டது. எட்டாவது மண்டிலம் கண்ணுவராற் றொகுக்கப்பட்டது. ஒன்பதாவது மண்டிலம் ஆங்கீரசால் தொகுக்கப்பட்டது. விசுவாமித்திரராற் றொகுக்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/184&oldid=1579809" இலிருந்து மீள்விக்கப்பட்டது