உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

மூன்றாவது மண்டிலத்தில் மிகச்சிறந்த காயத்திரி மந்திரமான “ஓம்தத்சவிதுர் வரேணியம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோயோ நஹ் ப்ரசோதயாத்" என்பது காணப்படுகின்றது. இம்மந்திர வுறையுளிற் பெறப்படுகின்ற பொருள், “அன்பினாற் செய்யப் படும் எம் வேள்வி முறைகளை நடைபெறுவிக்குந் தெய்வத் தன்மையுடைய சாவித்திரியின் விழையத்தக்க ஒளியை யாம் வழிபடுகின்றேம்" என்பதேயாம். இங்ஙனஞ் சிறந்த மந்திர வுறையுளான காயத்திரியிலும் ஞாயிற்றின் வழிபாடே காணப்படுகின்றது. இப்பெற்றித்தாகிய இருக்கு வேதம், ஆழ்ந்த நுண்பொருளுடைய தொல்காப்பிய நூலோடு ஒப்புப் பெறுதலும் அதனினும் உயர்தலு மில்லையாதல் தேற்றமேயாம். இதுவேயு மன்றித்,தொல்காப்பிய நூலோடு ஒப்புப்பெறும் விழுப்பமுடைய பழைய நூல் உலகத்திற் பரந்துகிடக்கும் எம்மொழியிலும் இல்லையென்பது துணிபொருள். ஆகவே, இவ்விரு நூல்களின் வாயிலாக அறியப்பட்ட இவ்விரு சாதியாரின் சிறப்பியல்புகள் விரவிக் காணப்படும் நூல்கள் எந்த மொழியிலே எழுதப் பட்டிருப்பினும், அவை அவ்விருவர்க்கும் உரிமையுடையவாதற்கு இழுக்கில்லை யென்க. இருக்கு வேதத்தின் பின்னெழுந்த ஆரிய மொழி நூல்களிலெல்லாம் இவ்விருவகைச் சாதியார்க்குமுரிய இருவேறு அறிவுத்திறங்களும் விரவிக்கிடத்தலால், அவ்விரு வேறு அறிவுமுடைய அவரிருவரும் ஒருங்கு விராய் உறைந்த காலத்தில் அவை இயற்றப்பட்டன வென்பது தெற்றெனப் புலப்படும். இவ்வாறு இவர்தம் இருவேறு அறிவுத்திறங்களுள் தமிழர்க்குரிய உண்மை நுண் பொருளாராய்ச்சியின் ஏற்றம் உயர்ந்து, ஆரியர்க்குரிய வேட்கு முணர்வு சுருங்கிய காலத்தில் சாந்தோக்கியம் முதலான உபநிடதங்கள் எழுந்தன. இவ் வுபநிடதங்களெல்லாம் ஒரு முகமாய் நின்று, ஆரியர் இயற்றிப்போந்த வேள்விப் பயன்களை மறுத்து அறிவுப் பொருளை விதந்தெடுத்து விரித்து வரையுறுத்துகின்றன. கிடக்க.

சூத்திரங்களின் தோற்றம்

ப்

து

இனி, இவ்வுபநிடத ஞானகாண்டப் பொருள் ஆங் காங்கு மலிந்து பரவுதலும், அந்த ஞானகாண்டப் பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/185&oldid=1579810" இலிருந்து மீள்விக்கப்பட்டது