உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

161

ளொடு பெரிதும் இகலி வேதங்களின் கன்ம காண்டப் பொருளே உறுதிப் பொருள்களென வலியுறுத்தற் பொருட்டு, ஆரியர் தமக்குள் மனவெழுச்சி மிகவுடையராய் வழக்கு நிகழ்த்துகையில், அவர்களுட் சிறந்த சைமினி என்னும் ஆரியமுனிவர் ஒருவராற் பூருவமீமாஞ்சை எனப்படும் ஒருநூல் இயற்றப்பட்டது. இவ்வாறு-சைமினி முனிவர் கன்மகாண்டப் பொருள் நிறுவற்கெழுந்து அப்பொருள் தெரிக்கும் வேதப்பகுதிகளை நிரம்பவும் உயர்த்தெடுத்துப் பாராட்டுவாராயினர். இதுகண்டு தமிழர்க்குள் அக்காலத்து நிரம்பச் சிறந்த சான்றோராய் விளங்கிய கபிலர், “கன்மகாண்டப் பொருள் போதிக்கும் வேதங்கள் அசுத்தம் பெரிதுடைய” வென்றும், அப்பெற்றிப்பட்ட அவ்வேதத்தை ஒரு பெரும் பிரமாணமாகக் கோடல் வழுவா மென்றுஞ், சைமினி மதம் ஒரு சிறிதும் பொருந்தாதென்றும் விளங்கக்காட்டி, நிலம் முதல் உயிரீறாகக்கிடந்த மெய்ப் பொருள்களி னியற்கையை உள்ளவாறு அறிந்து அறியாமை யினை நீக்கிப் பற்றறுத்தலே பேரின்பம் பெறுதற்கேதுவாமென்று அறிவுறுத்திச் சாங்கியசூத்திரம் இயற்றியிட்டார். இவர் சகேத நாட்டரசனான சுசதா என்பவன் காலத்திருந்தார் என்றும், அவ்வரசன்

.

கௌதமசாக்கியர் பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகட்கு முன்னிருந்தானென்றும், இதனால் இவர் காலம் இற்றைக்கு இரண்டாயிரத்துத் தொள்ளாயிர ஆண்டுகட்கு முன்னதாமென்றும் மகா போதியிற் பண்டிதர் வித்யாபூஷண மென்பவர் நன்கு விரித்துக் காட்டினார். சாங்கியசூத்திரம் அருளிச்செய்த கபிலர் கடவுளிருப்பைப்பற்றி ஏதும் மொழிந் திடாமையின், அதனையும் நிறுவிச் சைமினி சூத்திரப் பொருளையும் மறுத்தற் பொருட்டுப் பதஞ்சலி முனிவரானும் வாதராயண வியாசரானும் முறையே யோகசூத்திரமும், வேதாந்த சூத்திரமும் அருளிச் செய்யப் பட்டன. இக்காலத் திங்ஙனந் திரவிட வாசிரியர், சைமினியற்றிய பூருவமீமாஞ்சைப் பொருண் மறுப்பாய் சாங்கிய சூத்திர முதலியன இயற்றுவாராக, இவர் செய்த ஆராய்ச்சித் திறங்களை அளந்தறிதற் கரு வி யாகக் கௌதமரால் நியாய சூத்திரமுங் கணாதரால் வைசேடிக சூத்திரமுஞ் செய்யப்பட்டன. சைமினி சூத்திரம் ஒழித்து ஒழிந்த ஐவர் நூல்களும் மெய்ப்பொருளாராய்ச்சித் திறன் வலியுறுத்தி மக்கட்கு நலம் பயப்பவாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/186&oldid=1579811" இலிருந்து மீள்விக்கப்பட்டது