உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் 10

வ்வாறு இச்சூத்திரங்கள் நிலைபெறலாகி விரிந்து விளங்கும்பொழுது, ஆரியரொடு மறுதலைப்பட்ட தமிழச் சாதியார் மனவெழுச்சி மேன்மேன் மிகப்பெற்றாராய்த் தமக்கு இயற்கையே தோன்றிய கொல்லாமை, புலாலுண்ணாமை, பிறர்க்குதவுதல் முதலிய அறத்தின் கூறுகளை ஆங்காங்கு விரித்துரை நாட்டுதற்குத் தலைப்பட்டனர். கபில வாஸ்து வன்னும் நகரத்திலிருந்த கௌதமசாக்கிய ரென்னுந் திராவிட அரசிளைஞரும் அறப்பொருள் விழுப்பந்தோன்ற ஆரியர்க்கும் பிறர்க்கும் அறிவு கொளுத்திப் புகழ் பெறுவா ராயினர். தமிழர் தம் நுட்பமதியாற் கண்ட கடவுளிருப்பு, உயிர்களிருப்பு, மாயையிருப்பு என்னும் முத்திறமும், இவற்றோடு உடன் எண்ணப் படுவனவாகும் இருவினை, மறுபிறவி, துறக்க நிரயங்கள், கொல்லாமை, புலாலுண்ணாமை முதலியவும் அவரெல்லார்க்கும் உரிய கொள்கைகளாகும். இவற்றுள் ஏனைப்பிறவற்றைக் கபிலர் முதலான தொல்லாசிரியர் ளக்குதல் பற்றி அவற்றை விடுத்து அறத்தின் சிறப்பைமட்டுங் கௌதமபுத்தர் எடுத்துரைப்பாராயினர். இப்பெற்றி தேறாத இவர் சீடர் நால்வரும் இவர்க்குப்பின் இவர்தம் உள்ளக் கருத்தினியல்பறியாது முரணி நால்வகை மதங்கள் கட்டி நடத்தினர். இவர் நால்வரும் புத்தர்க்கு மாணாக்கராதல்பற்றி இந்நால்வர் பிரித்த மதங்கள் ஒருங்கியைந்து பௌத்தம் எனும் பெயரால் வழங்கப்பட்டன. இது கிடக்க.

7

இனி, மேலே கூறிய வரலாற்றினாற் பண்டைக் கால நூல்வரலாறு மூன்றுகூறாக வரையறுக்கப்படுதலும் அறியற் பாற்று. அவை வேதகாலம், உபநிடதகாலம், சூத்திரகால மென்பனவாம். இவற்றுள் வேத காலம் என்பது கிறித்து பிறப்பதற்குமுன் 3400 ஆண்டு முதல் 2400 வரையுமாகும். ஈண்டு யாங் கணக்கிட்டகாலம் உரோமேஷ் சந்திர தத்தர் முதலான நூலாசிரியர் வரையறுத்த கால வளவைக்கு மேல் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் மேற்படினும், பாலகங்காதர திலகர் அரியதோர் நுட்பவாராய்ச்சி செய்து வெளியிட்ட ‘வேதங்களின் வடநில இருப்புகள்’3 என்னும் நூன்முடிபுக்குப் பெரும் பான்மையும் பொருந்துதலானும், இங்ஙனங் கணக்கிடுதற்குக் காரணங்கள் பலவுளவாதலானும் அவ்வாறு வரையறுப்புச் செய்தாமென்க. இக்காலத்தில் ஆரியருந் தமிழரும் போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/187&oldid=1579812" இலிருந்து மீள்விக்கப்பட்டது