உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

163

மலைந்து அலைப்புண்டு சிறுகச் சிறுக ஒருமை யுறுதற்குத் தொடங்கினர்.

1400

இனி உபநிடத கால மென்பது கி.முன் 2400 ஆண்டு முதல் வரையுமாகும். இக்காலத்தில் ஆரியருந் தமிழருங் குடியிருப்பளவிலே ஒருமையுறினுங் கருத்தொருமையுறாது சிறிது சிறிதாய் ஒருவர் கருத்தினை மற்றவர் தழுவுதற்குத் தொடங்கினர். இக்கால இறுதியில் தமிழர்க்குரிய மெய்யுணர்ச்சி மிகுந்து தலையெடுத்தமையால் ஆரியர்க்குரிய பண்டைவேள்வி ஆற்றும் கடப்பாட்டுணர்ச்சி சுருங்குவதாயிற்று.

னிச் சூத்திர காலமென்பது கி.முன் 1400 முதல் கி.பி. துவக்கம் வரையுமாகும். இக்காலத் தொடக்கத்தில் சைமினி என்னும் ஆரிய முனிவரெழுந்து உபநிடதப்பொருளை மறுத்துப் பண்டை வேதபாகத்திற்கு உயர்வுகற்பித்து ஆரவாரிப்பவே, அவர் தம்மை மறுத்து அறிவுப்பொருளை நிறுவுதற்பொருட்டுச் சாங்கிய சூத்திர முதலாயின கிளர்ச்சியுற்று எழுந்தன. க்காலத்துக் கௌதமசாக்கியர் மேற்கொண்ட அறவுரையும் ஆங்காங்குப் பன்முகமாய் விரிந்து பரவி மெய்யுணர்ச்சிக்கொரு

பெருந்துணையாயிற்று.

இனி, இங்ஙனம் போந்த சூத்திர காலத்திலே தான் செந்தமிழ்த் தென்னாட்டின் தலைநகரான மதுரையிற் கடைச் சங்கம் நிலைபெற்று விளங்கிற்று. இப்போது தமிழென்னும் நங்கை வளர்ந்து முற்றுதற்குரிய உறுப்பின் வளனெல்லாந் திரண்டு பேரெழிற்றோற்ற முடையளாய்க் கண்டார் கண் ஆற்றாப் பேரொளி வீச விளங்கினள். அவள் அருமைக் கொழுநனான இறையனாரால் இறையனாரகப் பொருட் சூத்திரமும், அருமைப் புதல்வரான தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரால் திருக்குறள் என்னும் ஒப்புயர்வில்லா அரியபெரிய நூலும் அருளிச்செய்யப்பட்டன. நன்றறிந் தேன், இவ்விரு நூல்கட்கும் இவையெழுந்த காலத்திற்கும் நிரம்ப ஒற்றுமை யுண்டென்றதனை அறிதல் வேட்கை மிகவுடையே னெனிற் கூறுதும்.

வேதகாலத்தின் எழுந்த நூல்களெல்லாம் பலராற் பலவகையால் எழுதப்பட்டு ஒருதுறைப்படுதலின்றி ஒன்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/188&oldid=1579813" இலிருந்து மீள்விக்கப்பட்டது