உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

9

மறைமலையம் 10

டான்று ன்று இணங்காவாய் வாளா விரிந்து கிடந்தன. உப நிடதகாலத்தில் எழுந்தனவோ ஆழ்ந்த நுண்ணறிவுடைய ய சிலரால் எழுதப்படினும் நுண் பொருண் மாத்திரையே கிளந்துரைத்தற் கடப்பாடுடையவாய்க் கிடந்தன; இவற்றில் நுண்பொருள் ஒருதுறைப்படுமாறு நன்கமைக்கப்படாதுசிதர்ந்து விளங்கின; இவ்வாறு இறைந்து ஒழுங்கின்றி எழுதப்பட்ட அந்நூல் நுண்பொருள் தேறமாட்டதார் தாந்தாம் வல்லவாறு அவற்றிற்குத் தாங்கருதிய பொருளை ஏற்றி இடர்ப்படுவா ராயினர். மற்றுச் சூத்திரகாலத்திலோ, இங்ஙனம் ஞானகாண்டப் பொருள் தெரிவுறுக்கும் உபநிடதங்கள் அறியார் பலரால் அலைத்துப் பொருள் செயப்படுத லோர்ந்து அவற்றின் பொருள் உறுதி பெறுவித்தற்பொருட்டுச் சொற்சுருங்கிய விழுமிய யாப்பினாற் பொருட்டிட்பநுட்பஞ் செறியப் பாகுபாடு நனிவிளக்கிச் சூத்திரங்கள் எழுதப்பட்டன. இச்சூத்திரங்களில் வேண்டா கூறுதலான அடைமொழி ஒன்று தானுங் காணப்படு வதில்லை. பொருளுணர்த்துதற்கு வேண்டு மாத்திரையே சொற்கள் திறம்படு முறையால் வாய்ப்பப் பொருத்தப் பட்டன. இச்சூத்திரங்களெல்லாம் ஈண்டைத் திருக்குறள் போலவே பெரும்பான்மையாற் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் வாய்ந்து சூத்திர அடைவு அதிகார அடை வு நனிதுலங்கி நடைபெறுகின்றன.பண்டைக் காலத்திருந்த வெறுஞ் சொல்லாரவார விரிவெல்லாம் ஒருங்கே மறைந்தன. தமிழிலேயும் அகப்பொருளிலக்கண விரிவெல்லாஞ் சுருக்கி அறுபதுசூத்திர வுருவிலே இறையனாரகப் பொருள் இயற்றப்பட்டமையும் மக்களுயிர்க்குறுதி பயப்பனவாகும். எல்லாப் பொருளும் மெய்பெறத் தெரித்து மிகச் சுருங்கிய ஆயிரத்து முந்நூற்று முப்பது குறுவெண் பாட்டுக்களிலே திருக்குறள் இயற்றப் பட்டமையுங் கடைப்பிடித் துணருங்கால் இச்சூத்திர காலத்திற்கும் இதன்கண் எழுந்த களவியல், திருக்குறள் என்னும் இரண்டு நூல்கட்கும் நிரம்ப வொற்றுமை யுண்டென்பது மலைவின்றிப் பெறப்படுதல் காண்க. இன்னும் வடமொழியி லெழுதப்பட்ட அவ்வறுவகைச் சூத்திர நூல்களினும், இத்திருக்குறள் மாட்சி பெரிதுடைத்தாம்.என்னை? அந்நூல்களெல்லாம் ஒரோவொரு பொருளையே மரபுவழாது நன்கெடுத்துக் குறிப்பனவாக, மற்றுத் திருக்குறளோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/189&oldid=1579814" இலிருந்து மீள்விக்கப்பட்டது