உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் - 10

ஆதி' என்னும் வ என்னும் வடசொல் முதன்மை என்னும் பண்புப் பொருளையுணர்த்தும் அஃறிணைப் பண்புப் பெயராய்ப் பின்வரும் உயர்திணைப் பெயரோடு இயைந்துநின்று பண்புத்தொகையாய் முதற் கடவுளையே உணர்த்துமென்பதும், ஆதிபகவன்’ என்னுமச் சொற்றொடர் இலக்கணநெறியால் இனிது விளக்கிற்றாகலின், அவ்வியல்பறியாது நாத்திகவாதிகள் நிகழ்த்தும் ஆசங்கை நிலைபெறமாட்டாதென்க. ஆகவே ஆசிரியர்க்கு உலோகாயதவாதி பூதவாதி முதலான நாத்திகர் கூறுமுரை உடம்பாடன்மை தெளியக் கிடந்தது.

இனிக் கபிலவாஸ்துவிற் பிறந்து சீவகாருணிய வொழுக்க நல் அறவுபதேசஞ் செய்தருளிய கெளதம சாக்கியர் அவ்வற உபதேசம் மாத்திரஞ் செய்து போந்தனரன்றி, ஆன்மநிலை கடவுள் நிலைகளைப் பற்றிச் சிறிதும் பேசினாரில்லை. எனவே, ஆதிபுத்தரால் விளக்கப்பட்ட பௌத்தம் ஒரு சன்மார்க்க நெறியே யாகுமல்லது, அதனை ஒரு மதமென வைத்துக் கூறுதல் சிறிதும் பொருந்தாது. கௌதமர், “பிறப்பு உளதாங்காறும் பிறவித் துன்பங்கள் இடையறாது வருகின்றன; அப்பிறவித் துன்பங்களை அறுத்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் நல்லொழுக்கங் களை மேற்கொண்டொழுகுதலே யாவருஞ் செயற்பாலதாம்; திருந்திய நல்லொழுக்கங்களாவன தூயவுள்ளமும், தூய சொல்லும், தூயசெய்கையுமாம்; இவைதம்மைச் சலிப்பின்றிக் காண்டு நடத்தலால் உயிர்கட்கு நிருவாணம் என்னும் வீடுபேற்றின்பம் எய்தக் கிடக்கும்” என்பதையன்றி வேறு சிறிதும் உபதேசித்தலர். இங்ஙனங் கௌதமர் அறவுபதேசமன்றிப் பிறிதொன்றுஞ் சொல்லாமையானே அவர் சீடரிற்பலர் ஆன்மநிலை கடவுள் நிலையைப்பற்றித் தாம் பலவாறு சிந்தித்தும் அவற்றிற் றுணிவுப் பொருள் பிறவாமையானே. அவர்பாற் சென்று அவை தம்மை உசாவிய வழி அவர் அவர்க்கு அவை தம்மை அறிவுறுத்திலர்.ஒருகால் மலூக்கிய புத்தர் என்னும் அவர் சீடர் ஆன்ம நிலையைப் பற்றிக் கௌதமரிடம் உசாவப் புகுந்து, "எல்லாம் முற்றுப்பெற்ற புத்தர் இறந்தபின் இருப்பரோ இராரோ?” என்று வினவினார். அதற்குக் கௌதமர், “மலூக்கிய புத்த, ‘நீ என்னிடம் வந்து எனக்குச் சீடனாயிரு; உனக்கு நான் இவ்வுலகம் என்றும் உள்ளதா இல்லதாவென்று உபதேசிப்பேன்' எனக் கூறினேனா?” என்று கேட்டார். அதற்குச் சீடர், “ஐய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/253&oldid=1579878" இலிருந்து மீள்விக்கப்பட்டது