உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

8. திருவள்ளுவர் திருக்குறள்*

66

அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு.

“மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.”

(குறள் 1)

(குறள் 3)

ப்

திருவள்ளுவநாயனா ரியற்றிய திருக்குறள் நூலைப் பற்றி அவர் காலத் திருந்தவர்களும், அவரைப் போன்ற தமிழறிவு வாய்ந்திருந்தவர்களும் ஆகிய தமிழ்ப் புலவர்களே பலப பாராட்டிக் கூறியுள்ளார்கள். “எல்லாப் பொருளு மிதன்பாலுள; இதன்பால் இல்லாத எப்பொருளு மில்லையால்”, என்று அவர்களில் ஒருவர் கூறியாங்கு, மக்களாகிய நாம் எல்லோரும் அறிய வேண்டுவன எல்லாம் இத் திருக்குறள் நூலின்கண் உள. ஆகவே, அத்தகைய பெருமை வாய்ந்த ஒரு நூலைப் பற்றிச் சிறிது நேரத்தில் ஒரு சிறிது எடுத்துப் பேசுவது அருமையிலும் அருமையாகும்.

கடல் நீரை அளக்கக் கருவியு முண்டோ? "ஆழவமுக்கி முகக்கினு மாழ்கடலில் நாழி முகவாது நானாழி”. ஆகவே, கடல் நீரை அளந்தெடுத்து அறுதியிட்டுக் கூறுதற்குரிய கருவி ஒன்றை யாம் இதுகாறுங் கண்டிலம். அது போலவே, குறளாகிய கடலிலுள்ள அரும்பொருளாகிய நீரை அளந்தறியும் கருவியு மொன்றுண்டு கொல்! ஆகவே குறளாகிய அப்பேராழியில் என் சிற்றறிவாகிய சிறு நாழி கொண்டு எத்துணை முகத்தற் கூடுமோ, அத்துணையளவுக்கு முகந்தெடுத்துக் கூற முயல்வேன்.

இம் முயற்சிக்கு உறுதுணையாகத் திருவள்ளுவர் காலத் திருந்த ஓராசிரியர் பாடிய பாட்டொன்றையே முதற்கண் துணைக்கொள்வேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/255&oldid=1579880" இலிருந்து மீள்விக்கப்பட்டது