உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் ஆராய்ச்சி

"ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி”

என்பது அப்பாட்டு.

-கல்லாடர்

231

திருவள்ளுவர் காலமோ, இரண்டாயிரம் ஆண்டு கட்கு மேற்பட்டதாகும். அக்காலத்திலிருந்த பல திறப்பட்ட மதக் காள்கைகள் ஆறு சமயங்களாகப் பிரிக்கப்ட்டிருந்தன. இவ்வாறு சமயத்தோரும் தத்தம் சமயமே பெரிதென்றும், தத்தஞ் சமயக் கொள்கைகளே தலைச்சிறந்தனவென்றும் வழக்கிட்ட தோடன்றிப் பிற சமயங்களை மனம் போனவாறு இழித்துங் கூறிவந்தார்கள். இவ்வாறாக மாறுபட்ட இவ்வறு சமயத்தோரும் தழுவிக் கொள்ளத் தக்க வகையில் வள்ளுவனார் முப்பாலை மொழிந்திட்டார். அன்றியும் பல வகைப்பட்ட சாதியாரும், நாட்டினரும், காலத்தினரும், பிறரும் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் அந்நூல் செய்யப்ட்டிருந்தமையினாலேயே அதனை “எப்பாலவரும்” தழுவிக் கொள்வாராயினர்.

முப்பால் என்பது அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுமேயாம். இந்த முறையிலேயே திருக்குறள் நூல் யாக்கப் பட்டதாகும்.இதுபற்றியும் அந்நூல் யாவராலும் மாறுபாடின்றித் தழுவப்பட்டு வருவதாயிற்று. ஒரு நூலை இயற்றுங்கால் அந்நூல் எல்லோர்க்கும் உறுதியளிக்கத் தக்க வகையில், பயன்றரத் தக்க வகையிலும், எல்லோரையும் புனிதப்படுத்தத் தக்க வகையிலும் அதனை இயற்றி முடித்தல் என்பது எல்லார்க்கும வாய்ப்ப தொன்றன்று, அஃதவ்வாறாக,

“அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின் றிறன றிந்தேம் வீடு தெளிந்தே - மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற் கேளா தனவெல்லாங் கேட்டு”.

என்று வள்ளுவர் காலத்துப் புலவரொருவர் வியந்து பாடுமாறு நூலியற்றினார் வள்ளுவனார் எனின், அவர் பெருமை இனைத்தென்று சொல்லவும் போமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/256&oldid=1579881" இலிருந்து மீள்விக்கப்பட்டது