உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

66

மறைமலையம் 10

"அறம்பொரு ளின்பம்வீடு டென்னுமந் நான்கின்

றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்

வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார்”.

என்றார் மற்றொரு மாப்புலவர் மாமூலனார். “தேவை” என்றது தெய்வத்தை என்று பொருள்படும். உண்மைத் தெய்வங்களை யன்றி மக்களை எளிதிற் பாடிப் புகழாத் தன்மை வாய்ந்த ஒரு பெரியார் வள்ளுவனாரைத் “தேவை” எனப் புகழ்ந்தனர்; ஆம், அக்கால இயற்கைக்கு மாறாகப் புகழ்ந்தனர். எத்துணைக் கற்று எத்தனை எழுதினும், மகனாய்ப் பிறந்த ஒருவனைத் தெய்வம் என்று புகழ்ந்து கொண்டாடுதல் அன்றும் இன்றும் ஆங்கிலேய ரிடம் காணப் பெறாமை நோக்கத் தக்கதாகும். நிற்க, இப்பாட்டே துணையாக வள்ளுவனாரை வள்ளுவச் சாதியிற் பிறந்தவராகக் காண்டு கூறுவோர் கூற்று, அறிவில் கூற்றேயாகும்.

முப்பாலின் பயன் விடென்பது ஒப்ப முடிந்ததோர் உண்மையாகும். வீடு என்பதையும் முப்பாலுடன் சேர்த்து நாற்பால் என மொழிதலும் உண்டு. அத்தகைய விழுப்பயனாகிய வீட்டை உய்த்தறியுமாறு உள்ளடக்கி வைத்து, "முப்பாலில் நாற்பால்” மொழிந்த பெருமை திருவள்ளுவர்க்கே உரித்து.

இனி, வள்ளுவனார் இற்றைக்குக் குறைந்தது 1900 ஆண்டு கட்கு முன் பிறந்தவர் என்பது பற்றி யான் விரிவான ஆராய்ச்சி செய்து, து, “திருக்குறளாராய்ச்சி" என்று முன்னர் எழுதிய ஒரு முற்பகுதியிலும், “மாணிக்க வாசகர் காலமும் வரலாறும்” என்ற நூலிலும் எழுதியுள்ளேன். அவற்றில் குறித்துள்ள சான்றுகளை எல்லாம் ஈண்டெடுத்துக் கூறி விளக்கக் காலம் போதாது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலை, சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகள் காலத்திலேயே எழுதப்பட்ட நூலாகும் என்பது சிலப்பதிகாரத்தின் இறுதியில் ஆசிரியர் "மணிமேகலைமே லுரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்" என்பதனால் அறியப்படும். மணிமேகலை மேலுரைப் பொருள் முற்றிய நூலொன்றை இயற்ற எண்ணங்க கொண்ட வாராய் ஆசிரியர் கோவலன் கதையைக் கூறி “அரசியல் பிழைத் தோர்க் கறங் கூற்றாவதூஉ, முரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலு, மூழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉஞ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/257&oldid=1579882" இலிருந்து மீள்விக்கப்பட்டது