உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் ஆராய்ச்சி

233

சூழ்வினைச் சிலம்பு காரணமாகச், சிலப்பதிகார மென்னும் பெயரா, னாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென, முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரிய, தடிகணீரெ யருளுக”, என, 'உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்” என்பது உற்று நோக்கற்பாலது, சாத்தனார் பாண்டியனவைக்களப் புலவர்; அவர் “சிலப்பதிகாரம்” இயற்றப் புகுவாராயின் பாண்டியனைக் குறைத்துப் பேச நேருமாதலால் அதற்கு உளமிசையாராய், இளங்கோவடிகளைப் பாடச் சொன்னார் என்பதும் துறவிக்கு வேந்தன் துரும்பாதலின், துறவியாகிய அடிகட்கு அஃது எளிதாம் என்பதும் உய்த்துணரற் பாலனவாம். "வேந்தர் மூவர்க்கு முரிய தடிகணீரே யருளு கென்றாற்கு” என்பதற்குரை கூற வந்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் “தான் பாடக்கருதி வினாவின சாத்தற்கு அங்ஙனங் கூறாது இங்ஙனங் கூறினாரென்க. என் சொல்லியவாறோ வெனின் இச் செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கு முரிய தென்பதனால் ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவேமென்பது கருதி, நீரே அருளுமென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம்பட்டா ரென்பதாயிற்று” என உரை எழுதிப் போந்தமையுங் குறிப்பிடற்பாற்று.

இளங்கோவடிகள் சேர நாட்டில் வஞ்சி நகரத்திருந்து அரசு புரிந்த சேரலாதனென்னும் அரசனுடைய இளைய மகனார்; சேரன் செங்குட்டுவனின் இளவல். ஒரு நாள் அரசவையில் இவர்தம் தந்தையுடனும் தமையனுடனும் வீற்றிருந்த காலை ஒரு நிமித்திகன் வந்து இவரை அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி, அரசு வீற்றிருக்கும் இலக்கணம் இவர்க்குண்டென, அது கேட்ட தமையன் செங்குட்டுவன் அழுக்காறுமிகுந்து கண்ணெரி தவழ அண்ணலை நோக்குவதைக் கண்ட இவர், உடனே தமையனுக்குத் துன்பம் வராதபடி அரசு துறந்ததைக் கூறிக் குணவாயிலிற் சென்று துறவுபூண்டு “சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத் தந்தமி லின்பத் தரைசாள் வேந்தராயினார்.

இத்தகையப் பெரியாராகிய இளங்கோவடிகளும் கூல வாணிகன் சாத்தனாரும் ஒரே காலத்தவர் என மேலே கூறினாம். சிலப்பதிகாரக் கதைத் தலைவியாகிய கண்ணகிக்குக் கல்நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/258&oldid=1579883" இலிருந்து மீள்விக்கப்பட்டது