உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் -10

ய ய

விழா நடைபெறுங்காலை இலங்கைக் கயவாகு முதலாவன் வந்திருந்தான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அவனுடை காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு என்று இலங்கை மகா வமிசத்தினாலும் பிற ஆராய்ச்சியினாலும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சிலப்பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது பெறப்படும். அக்காலத்ததே சாத்தனார் பாத்திரமாகிய மணிமேகலையு மாகும். அம் மணிமேகலையில் “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை என்று திருவள்ளுவரையும் அவர் நூலாகிய திருக்குறளையும் ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார். எனவே, திருவள்ளுவனார் காலம் 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது எளிதிற் பெறப்படும். 2 கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பதுயாம் ஆராய்ந்து கண்ட முடிபாகும்.

இனி, திருவள்ளுவரின் பெற்றோர் யாரென ஆராய்வாம்; எண்ணூறு ஆண்டுகட்குமுன் எழுதப்பட்டஞானாமிர்தம் என்ற நூலில் அவர்கள் பெயர் யாளிதத்தன் என்றும ஆதியென்றும் குறிக்கப்பட்டுள்ளன. கபிலரகவல் என்ற மற்றொரு சிறந்த தமிழ்ச் செய்யுணூலில் அவை பகவன் என்றும் ஆதியென்றும் குறிக்கப் பட்டுள்ளன. இக்கபிலர் சங்க காலக் கபிலரே என்பதும், இவர் கூறிய கதையில் பிறழ்ச்சி யொன்றுமில்லையென்பதும் உண்மை களாகும். சொற்போக்கு, பொருள்வளம், நடை முதலியவற்றை ஒப்பிடுவோர்க்கு இவ்வகவல் சங்க காலத்ததே என்பது புலனாம். ஆகையால், இதன்கண் கூறப்படும் உண்மைகள் கொள்ளத் தக்கனவே. இவ்வகவலில் “வள்ளுவர் வளர்க்க வள்ளுவன் வளர்ந்தனன்” என்று கூறப்பட்டுள்ளது.

இனி, குறளிற் காணப்படுஞ் சொற்களெல்லாம் தனித்தமிழ்ச் சொற்களே. அந்நூலெழுந்த காலம் தனித்தமிழன்னை அம்பலக் கூத்தனோடு தாண்டவமாடிய காலம்; உருக்கி வார்த்த பசும்பொற் பாவைபோல் அவ்வன்னை இன்பக் கூத்தாடிய காலம். மாசு நிறைந்து, திருவழிந்து, ஆரியமும், ஆங்கிலமும் ஆகிய அம்மைத் தழும்புகளுடன் தோன்றும் இக்காலத் தமிழன்னையை யொத்து அக்கால அன்னையைக் காணல் முடியாது. எழுதிய வெல்லாம் தூய தமிழில் எழுதப்பட்ட அக்காலத்தில் எழுந்த தாகும் குறள் என்னும் ஒப்பிலாத தூய தமிழ் மறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/259&oldid=1579884" இலிருந்து மீள்விக்கப்பட்டது