உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

235

அவ்வாறு கலப்பில்லாத தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு நூலின் றொடக்கத்திலேயே ஆசிரியர் “ஆதிபகவன்” என்ற இரு வடசொற்களை யமைத்திருத்தற்கு ஒரு சிறப்புக் காரணம் இருந்திருத்தல் வேண்டும் என்பது எளிதில் ஊகிக்கப்படும். தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையரை ஒழுக்கத்திற் சிறந்த ஆசிரியர் போற்றுவதற்காகவே அவ்விரு சொற்களையும் முதற்கண் வைத்தார் என்று கோடல் மிகையாகாதென்பதே எமது கருத்தாகும்.

பண்டைக் காலந் தொட்டே பரம்பொருளை அம்மை யப்பராகப் போற்றி வரும் வழக்கம் தமிழ் நாட்டின்கண் இருந்து வந்துளது. இவ்வழக்கம் எகிப்து,பாபிலோனியா, எருசலேம் முதலிய நாடுகளிலும் பண்டைக் காலத்திலிருந்தமை ஒப்புநோக்கி மகிழ்தற்குரியதாம். கத்தோலிக்கர்களின் கருத்தும் இக்கருத்தை ஒத்திருப்பதும் நோக்கற்குரியதாகும். கடவுள் மகனைத் தன் வடிவிலேயே படைத்தார் என்பது விவிலிய நூற் கருத்து. கடவுளை ஆண் தத்துவத்தில் அப்பானகவும் பெண் தத்துவத்தில் அம்மையாகவும் பரம பிதா என்றும் பரிசுத்த ஆவி என்றும் இன்றும் கிறித்தவர்கள் வணங்கி வருவது யாவருமறிந்ததே. ரிக் வேதத்திலும் ஆண் வடிவமாகிய உருத்திரனுக்குப் பக்கத்தில் அம்மை வடிவமிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உலகமே ஆண் பண் வடிவு கொண்டதாகும். ஓரறிவு முதல் ஆறறிவீறாகவுள்ள எல்லா உயிர்களின் மாட்டும் காணப்படும் இவ்விருகைத் தோற்றத்திற்கு மூலம் இறைவனதுள்ளமே. ஆகவே, இவ்விருமைப் பண்பு தோற்றும் குறியீடாகிய உடம்பை இம்மண்ணிடைத் தமக்களித்த பெற்றோர்களுக்கு நன்றி கூறுவான் கருதியே ஆசிரியர் ஆதிபகவன் என்ற சொற்களை முதற்கண்

அமைத்தார்.

66

இனி, எல்லாம் அறிந்த ஞானியாகிய வள்ளுவர் அழிதன் மாலைத்தாகிய இவ்வுடம்பு பெற்றமை கருதி மகிழ்வாரோ என்ற ஐயம் நிகழலாம்!

“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டான்என் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/260&oldid=1579885" இலிருந்து மீள்விக்கப்பட்டது