உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் 10

என்பது திருமூலர் வாக்கு. இப்பாட்டின் முதல் வரியில் கூறியாங்கு, உடம்பு இழுக்காகும்; அது தீயது; ஒழித்தற் பாலது என்று ஒருகாற் கருதி வந்தது புத்த சமணக் கொள்கைகளைப் பின்பற்றியேயாம். தமிழ் நாட்டவரோ, “உடம்பா ரழியின் உயிரா ரழிவர், திடம்பட மெய்ஞ் ஞானம் சேரவு மாட்டார்" என்ற துணிபுடையவர். மணிமொழியாரும் முதலில் உ லை இழித்துப் பேசி ‘காயத்திடுவாய், உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே” என்று கூறினும், பின்னர்,

66

66

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே!’

என்பதனால், உடல் ஆண்டவன் தந்த அரும்பொருள் என்பதனை உணர்ந்து பாடியுள்ளமை உய்த்துணரற் பாற்று. இற்றைநாள் அறிவியின் முறைப்படி என்னென்ன புதுமைகளை இயற்றக் கூடுமாயினும், தாய் தந்தையின் சேர்க்கைக் காரணமின்றிப் புதிதாக ஓருடலைப் படைக்குமாறில்லை என்பதியாவரும் அறிந்ததே. இது கருதியன்றோ வள்ளுவரின் தமக்கையாராகக் கருதப்பட்டு வரும் அவ்வையாரும், “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று அறைந்ததாகும்! அம்மை காட் அப்பனை அறிவதே தமிழர் தத்துவம் என்பதும் இங்குக் குறிக்க வேண்டுவதொன்றாகும். அது கருதியே அவ்வையார் “அன்னையும் பிதாவும்” என்று முறைப் படுத்தியதும், ஆசிரியர் “ஆதி பகவன் என்று அமைத்ததுமாகும். இக்கூறியவாற்றல் தமக்கு உட யளித்து உயிரை மேன்மையுறுமாறு செய்த ஆண் பெண் தத்துவங்களாகிய அம்மையப்பரைப் போற்றும் எண்ணங் கொண்டே ஆசிரியர் “ஆதி பகவன்” என்ற இரு வடசொற்களை முதற்கண் அமைத்தார் என்று கூறினேன். இக்கருத்து ஏற்குமேற் கொள்க.

உடம்பை

இனி, திருவள்ளுவர் தம் பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஒன்றும் உறுதியாகக் கூறுவதற்கில்லை. பண்டைக் காலத்தில் வரலாறு குறிக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருகால், தப்பித் தவறிக் குறித்து வைத்திருந்த போதிலும், அக்குறிப்புகள் செல்லுக் கிரையாயினவோ, அன்றி, ஆடிப் பெருக்கில் மறைந்தனவோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/261&oldid=1579886" இலிருந்து மீள்விக்கப்பட்டது