உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

237

ஒன்றும் துணிந்து கூறுதற்கில்லை. வள்ளுவர் என்று ஒரு மகன் பெயரிடப்படுதல் யாண்டும் வழக்கி லிருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும், தொன்மையாக அப்பெயர் இருந்து வருவது குறித்து அஃதே பெயராகக் கொள்ளலே அறிவுடைமை யாகும். அப் பெயர் தமிழ்ப் பெயர் என்பது ஒன்று மட்டும் சற்று ஆறுதல் அளிக்க வல்லதாம்.

பயர் சற்று

ஐயம்

இனி,அவர் மனைவியாரின் ளைப்பதாகும். பலர் கூறுகிறபடி அப்பெயர் வாசுகி என்பதாம். இது வடசொல் என்பது யாவருமுணர்ந்ததே. திருவள்ளுவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் சங்க காலத்திற்கு முந்திய காலத்தில் இப்பெயர் ஒரு தமிழ்ப் பெண் மணிக்கு இருந்திருத்தல் கூடுமோ? பீலிவளை என்றும் வெள்ளி வீதி என்றும், நச்செள்ளை என்றும் பெயர்கள் வழங்கி வந்தமைக்குச் சான்றுகளிருப்ப, வாசுகி என்னும் பெயரமைந்தது எவ்வாறு? தமிழ்ப் பெயர்களை யெல்லாம் வடமொழியாக்கிக் கூறும் வழக்கம் அப்பொழுதே கால் கொண்டதோ? அன்றி, வாசுகி என்ற பெயர் பின்னர் வரலாறு எழுதப் புகுந்தோரால் புனைந்தெழுதப்பட்டதோ? வாசுகி என்பது பாம்பு. பாம்பு என்பதைப் பாப்பு என்று வலித்துக் கூறுதலுமுண்டு. இனி, தமிழ் நாட்டில் பாம்பு என்னும் பெயர் பெண்களுக்குப் பண்டைக் காலத்திலிருந்தே இடப் படுதல் பெருவழக்காகும். நாகம்மை என்றும் பாப்பம்மை என்றும் பெயர்கள் அன்றும் இன்றும் காணக் கிடப்பனவாம். எனவே, வள்ளுவர் மனைவியாரின் பெயர் பாப்பம்மையாக இருக்க, வரலாறு எழுதிய பிற்காலத்தாரால் அது வாசுகி என்று மொழி பெயர்த் துரைக்கப் பட்டதுபோலும்!

மனைவியாரின் பெயர்போலவே, அவ்வம்மையாரின் தந்தையாரின் பெயரும் வடமொழியிலேயே அமைந்துள்ளது. மார்க்க சகாயர் என்ற அப்பெயர் தமிழில் வழித்துணைவர் என்று பொருள்படும்.

இனி, வள்ளுவர் மனைவாழ்க்கையைப் பற்றி எழுந்துள்ள பழங்கதைகள் பற்பல. “இழை நக்கி நூல் நெருடும் ஏழை யறிவேனோ, குழை நக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து” என்பதைக் கொண்டு, அவர் நெசவு செய்து வாழ்ந்ததாகவும், இறைவனே திருவள்ளுவரைக் கேட்டுணருமாறு குறித்ததாகவும் கதைகள் கூறப்பட்டன. “அடிசிற் கினியாளே, அன்புடையாளே, படிசொற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/262&oldid=1579887" இலிருந்து மீள்விக்கப்பட்டது